தென்னையை தாக்கும் ஈரியோபைட் சிலந்தி

தென்னையை தாக்கி பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் ஈரியோபைட் சிலந்தியை கட்டுப்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. ஈரியோபைட் சிலந்தி 7 முதல் 9 நாட்களை வாழ்க்கை சரிதமாக கொண்டவை. 4 கால்களை கொண்ட ஊசி போன்ற வாய் அமைப்பு உள்ளவை. பெண் சிலந்தி 30 முதல் 50 முட்டைகள் வரை இடும். இச்சிலந்தி இளங்குரும்பைகளின் தொட்டுகளுக்கு அடியில் இருந்து கொண்டு குரும்பையின் மென்மை யான திசுக்களில் இருந்து சாற்றை உறிஞ்சி குடித்து உயிர் வாழ்கிறது.

பாதிக்கப்பட்ட குரும்பைகள் வளர் ந்து இளம் காய்களாக மாறும்போது பழுப்புநிற பகுதியின் அளவு மேலும் அதிகமாகி நீளவாக்கில் சிறு சிறு வெடிப்புகள் தோன்றும். முற்றிய காய்களில் இப்பழுப்பு நிற திட்டுகள் கடினமாவதால் நீளவாக்கில் பெரிய வெடிப்புகள் ஏற்படும். மேலும் 4 மாத இளங்குரும்பைகள் உதிர்ந்து விழும் வாய்ப்புள்ளது. இதனால் காய்களின் அளவு சிறுத்து, பருப்பின் அளவும் 10 முதல் 30 சதவீதம் வரை குறைந்துவிடுகிறது. இத்துடன் தேங்காய் உரிப் பதும் கடினமாகிறது. எண் ணிக்கை குறைவதில்லை.
ஆனால் காய்களில் அளவு சிறுத்து விடுகிறது. இதனால் வியாபாரிகள் நிராகரித்து விடுகின்றனர்.தேங்காய் உரிமட்டை கடினமாவதால் அதிலிருந்து கிடைக்கும் நாரின் அளவு, தரமும் பாதிக்கப்படுகிறது.

  • இந்த சிலந்தியை கட்டுப்படுத்த ஒரு மரத்திற்கு 1 ஆண்டுக்கு யூரியா 1,300 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, பொட் டாஷ் 3,500 கிலோ, வேப்பம்புண்ணாக்கு 5 கிலோ, நன்கு மக்கிய தொழு உரம் 50 கிலோ மற்றும் நுண்ணூட்ட சத்துக்களான போராக்ஸ் 50 கிராம், ஜிப்சம் 1 கிலோ, மெக்னீசியம் சல்பேட் 1/2 கிலோ இட வேண்டும்.
  • மேலும் வேப்பம்கொட்டையில் இருந்து தயாரிக்கப்படும் அசார்டிராக்டின் 1 சத தாவர பூச்சிக்கொல்லி மருந்தை சிறு கைதெளிப்பான் மூலம் 45 நாட்கள் இடைவெளியில் 1 முதல் 6 மாத குரும்பைகளின் மேல் படும்படி குறைந்தது 3 முறை தெளிக்க வேண்டும்.
  • முதல் முறை அசார்டிராக்டின் 1 சத மருந்து 5 மில்லியை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
  • இரண்டாவது முறை 30 மில்லி வேப்பெண்ணெயை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து அத்து டன் டீபால் ஒட்டுதிரவம் சிறிதளவு சேர்த்து தெளிக்க வேண்டும்.
  • கைதெளிப்பான் கொண்டு தெளி க்க முடி யாத உயரமான மரங்களு க்கு அசார்டிராக்டின் 1 சத மருந்து 10 மில்லி மருந்தை 10 மில்லி தண்ணீரில் கலந்து வேரில் கட்டி இச்சிலந்தியின் சேதத்தை வெகுவாக கட்டுப்படுத்தலாம்.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *