தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டு

அறிகுறிகள்

ஆரம்பநிலை – இளம் தென்னங்கன்றுகள் சேதமடைதல்

 • நடுக்குருத்து வெட்டுப்பட்டிருக்கும் அல்லது ஒன்றாக சேர்ந்திருக்கும்.
 • நன்றாக வளர்ந்த ஓலைகள் வைரம் போன்ற வடிவில் வெட்டுக்கள் காணப்படும்.
 • நடுக்குருத்தின் அடிப்பகுதியில் உள்ள துளைகளில் உண்ணப்பட்ட நார்கள் ஒட்டிக் கொண்டிருக்கும்.
தீவிர தாக்குதல் – ‘V’ வடிவத்தில் சேதமடைதல்
புழு

புழு: தடித்து, தட்டையாக, ‘C’ வடிவத்தில் மங்கிய பழுப்பு நிறத்திலையுடன் 5 -30 செ.மீ ஆழத்தில் காணப்படும்.

கூட்டுப்புழு : மண்கூடுகளில் 0.3-1 மீ ஆழத்தில் காணப்படும்.

வண்டு

வண்டு : தடித்து, பழுப்பு கலந்த கருப்ப அல்லது கருப்ப நிற தலையுடன் ஆண் வண்டுகளில் நீளமான கொம்பு தலையிலிருந்து முன்பக்கத்தில் நீட்டிக் கொண்டிருக்கும். பெண் வண்டுகளில் இந்தக் கொம்பு சிறியதாக இருக்கும்.

கட்டுப்பாடு :

 • இறந்த மரங்களைத் தோப்புகளிலிருந்து அகற்றி எரித்தவிடல் வேண்டும். ஏனெனில் அவைகள் வண்டினம் இனப்பெருக்கத்துக்கு உகந்த இடமாகிவிடுகிறது.
 • தொழு உரத்தை குழிகளிலிருந்து எடுக்கும் பொது அவற்றிலிரக்கும் புழுக்கள் மற்றம் கூட்டுப்புழுக்களைச் சேகரித்து அழித்துவிடவெண்டும்.
 • புழுக்களை உண்டு அழிக்கம் பச்கை மஸ்கார்டைன் பூஞ்சாணத்தை (மெட்டாரைசியம் அனிசோபிலியே) எருக்குழிகளில் கலந்து விடவேண்டும். இவ்வகைப் பூஞ்சாணம் அரசு உயிரியல் ஆய்வகங்களில் வளர்க்கப்படுகிறது. இப்பூஞ்சாணம் ஆய்வகத்தில் சோளம் மற்றும் காரட் போன்றவற்றில் வளர்க்கப்படுகிறது.
 • ஒரு கிலோ ஆமணக்குப் புண்ணாக்கினை 5 லிட்டர் தண்ணீரில் மண்பானைகளில் ஊறவைத்து, தோப்புகளில் ஆங்காங்கே வைத்து வண்டுகளைக் கவர்ந்து அழிக்கவும்.
 • பச்சைத் தென்னை மட்டைகளை நீளவாக்கில் பிளந்து அல்லது அழுகிய இளம் தென்னை மரத்தண்டுப் பகுதியினை கள்ளில் நன்குத் தோய்த்து, தோப்புகளில் ஆங்காங்கே வைப்பதன் மூலம் வளர்ந்த வண்டகளைக்  கவர்ந்தழிக்கலாம்.
 • ஒவ்வொரு முறையும் தேங்காய் எடுக்கும் தருணத்தில் தென்னை மடல் பகுதிகளை நன்குச் சோதிக்கவேண்டும். அரை மீட்டர் நீளமுள்ள குத்தூசிக் கொண்டு மடல்களுக்கும் குருத்துகளுக்கும் இடையே செருகி, வண்டிருப்பதைச் சோததித்து, இருந்தால் குத்தி எடுத்துவிடவேண்டும்.
 • தென்னங்கன்றுகளில் அடிப்பாகத்தில் பண்ணாடைகளின் உட்பகுதியில் மூன்றரை கிராம் எடையுள்ள மூன்று பூச்சிக்குண்டுகளை (பாச்சை உருண்டைகளை (அ) அந்துப் பூச்சி உருண்டைகளை) ஒரு கன்றுக்கு என்ற அளவில் 45 நாட்களுக்கு ஒருமுறை வைத்து கன்றுகளை வண்டின் தாக்குதலிலிருந்துத் தவிர்க்கலாம்.
 • விளக்குப் பொறியை முதல் கோடைமழை சமயங்களில் மற்றும் பருவமழைக் காலங்களிலும் அமைத்துக் கவர்ந்தழிக்கலாம்.
 • விளக்குப் பொறியை முதல் கோடை மழை சமயங்களில் மற்றும் பருவமழைக் காலங்களிலம் அமைத்துக் கவர்ந்தழிக்கலாம்.
 • பேக்குலோ நச்சுயிரியும் இவ்வண்டினத்தைத் தாக்கி அழிக்கிறது. இந்நச்சுயிரி உட்செரலத்தப்பட்ட வண்டுகளைத் தோப்புகளில் விடுவதன் மூலம் நச்சுயிரி அடுத்து வரும் சந்ததிகளில் பரவிப் புழுப்பருவத்தில் அழிவை ஏற்படுத்துகிறது. பேக்குளோ நச்சுயிரி நோய் தாக்கிய வண்டுகளை எக்டர் ஒன்றுக்கு 15 வீதம் தோப்புகளில் விடவும்.
 • வேப்பங்கொட்டைத் தூள் அல்லது வேம்பு பருப்புத் தூள் 150 கிராமுடன் இரண்டு மடங்கு மணலைக் கலந்து மடல் பகுதிகளில் உள்ளிருந்த மூன்றாவது மட்டைகளின் அடிப்பகுதியில் பண்ணாடைகளுக்கு இடையில் வைப்பதன் மூலம் வண்டுகளால் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்கலாம்.
 • போரெமட 10 சத குருணை மருந்து 5 கிராமை ஒரு சிறிய அடிப்பகுதியில் குண்ட ஊசியால் துளையிட்ட பாலீத்தீன் பையில் எடுத்துககொண்டு அடை மடல் பகுதிகளில் உள்ளிருந்து இரண்டாவது இடைவெளியில் இருமுறை வைப்பதன் மூலம் வண்டுகளால் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்கலாம்.
 • ரைனோலூர் (Rhinolure) இனக்கவர்ச்சிப் பொளிகளை இரண்டு எக்டருக்கு ஒன்று வீதம் வைத்து வண்டுகளைக் கவர்ந்து அழிக்கவும்.
தென்னை பற்றிய செய்திகளை இங்கே படிக்கலாம்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *