இயற்கையாக பூச்சிகள் வெளியிடக்கூடிய ஒருவகை மணமுள்ள வேதிப் பொருளால் அல்லது ஒரு குறிப்பிட்ட வண்ணத்தால், வெளிச்சத்தால் பூச்சிகள் கவரப்படுவது பொறிகள் எனப்படும். இவற்றை செயற்கை முறையில் அமைத்துப் பயன்படுத்துவதன் மூலம் பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளைக் கவர்ந்து இழுத்து, அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.
தென்னையை தாக்கும் பூச்சிகளை பொறி மூலம் அழிப்பது எப்படி என்று பார்க்கலாமா?
தென்னை மட்டைப் பொறி:
தென்னையின் பச்சை அடிமட்டையை 50 சென்டி மீட்டர் அளவுள்ள துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். புதிதாக இறக்கப்பட்ட கள்ளுடன் ஈஸ்ட் அல்லது அசிட்டிக் அமிலம் கலந்து நொதிக்க வைத்து, அதைத் தென்னை மட்டைத் துண்டுகள் மேல் தடவி, பிளவுபட்ட பகுதிகள் ஒன்றை ஒன்று நோக்குமாறு தோப்பில் ஆங்காங்கே வைத்து வண்டுகளைக் கவர்ந்திழுக்க வேண்டும்.
பானைப் பொறி:
கொட்டைப் புண்ணாக்கு (ஆமணக்கு) ஒரு கிலோவுடன் 5 கிராம் ஈஸ்டை 5 லிட்டர் நீரில் கலந்து, 24 மணி நேரம் ஊறவைத்த பிறகு, சிறிய மண் பானைகளில் தென்னந்தோப்பில் பல்வேறு இடங்களில் தரைமட்டத்தில் வைத்து தென்னையைத் தாக்கும் காண்டாமிருக வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம். மேலும், நீராகாரம் அல்லது ஆறிய அரிசிக் கஞ்சியுடன் 250 கிராம் ஆமணக்கு புண்ணாக்கை கலந்து, மண்பானைகளில் வைத்தும் காண்டாமிருக வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்