தென்னையை தாக்கும் வண்டுப்பூச்சி

தென்னையை தாக்கும் சிகப்பு கூன் வண்டு பூச்சிகளை கட்டுப்படுத்திட, விவசாயிகள் உரிய மருந்துகளை முறையாக பயன்படுத்தி வேண்டும்’ என, தோகைமலை தோட்டக்கலை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 • தென்னை மரத்திலுள்ள ஓட்டைகளில் சிகப்பு கூன் வண்டு தாக்கியதால், பஞ்சு போன்ற கழிவுகள் காணப்படும்.
 • செம்பழுப்பு நிற திரவமும், இந்த ஓட்டைகள் மூலமாக கசிந்து கொண்டிருக்கும்.
 • தென்னை மரத்தில் காதை வைத்து கேட்டால், சிகப்பு கூன் வண்டு புழுக்களின் நடமாட்டத்தை நன்கு கேட்கலாம்.
 • பாதிக்கப்பட்ட மரத்தை தட்டினால், பொத்தென்று சத்தம் கேட்கும்.
 • பெரும்பாலும், ஒன்று முதல், 20 வயதுக்குட்பட்ட தென்னை மரங்கள் அதிக அளவில் சிகப்புக் கூன் வண்டால் தாக்கப்படுகின்றன.
 • சிகப்பு கூன் வண்டு பழுப்பு நிறத்தில், உருண்டை வடிவில் நீண்ட வளைவான மூக்கு பகுதியுடன் காணப்படும்.
 • தென்னை மரத்தின் சேதப்படுத்தப்பட்ட தண்டு பகுதியில், பெண் வண்டு முட்டைகள் இருக்கிறது. இதிலிருந்து வெளிவரும் புழுக்கள், தென்னை மரத்தின் மிருதுவான பகுதியையும், நுனிப் பகுதியையும் உண்டு சேதப்படுத்துகிறது.
 • இதனால் மரம் இறந்து விடும் வாய்ப்பும் உண்டாகிறது.
 • தென்னந்தோப்பை சுத்தமாக வைக்க வேண்டும்.
 • மரத்தின் மீது கத்தி அல்லது அரிவாள் கொண்டு சேதப்படுத்தக்கூடாது.
 • மரத்தில் துளை இருப்பின், அதனை தார், பூச்சிக்கொல்லி கொண்டு அடைக்கலாம்.
 • பச்சை மட்டைகளை வெட்டக்கூடாது. அவ்வாறு வெட்டுவதாக இருந்தால், நான்கு அடி விட்டு வெட்டவேண்டும்.
 • தோப்பில் பட்டுபோன மரங்கள் இருந்தால், அவற்றை அப்புறப்படுத்தி எரித்து விட வேண்டும்.
 • மேலும், 10 மில்லி மானோகுரோட்டோபாஸ் மருந்தை, அதே அளவு தண்ணீருடன் கலந்து, வேர் மூலமாக செலுத்தி சிகப்பு கூன் வண்டை கட்டுப்படுத்தலாம்.
 • மருந்து செலுத்துவதற்கு முன்பு காய்களை பறித்துவிட வேண்டும்.

நன்றி: தினமலர் 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “தென்னையை தாக்கும் வண்டுப்பூச்சி

  • gttaagri says:

   No Sir, not anything we are aware of – to control வண்டுப்பூச்சி without மானோகுரோட்டோபாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *