தென்னை ஊடுபயிராக கோகோ

இந்தியாவில் கோகோ சாகுபடி 1970 களின் முற்பகுதியில் தொடங்கியது. இது கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தென்னை, பாக்கு, எண்ணெய் பனைகளின் சிறந்த ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கோகோ ஒரு வியாபார பணப்பயிர். சாக்லேட், பிஸ்கட், கேக், ஐஸ்கிரீம் மற்றும் ஊட்டச்சத்து பானங்கள் தயாரிப்பதற்கு முக்கிய மூலப்பொருளாக பயன்படுகிறது.

கோகோவை சார்ந்த உணவு பண்டங்களின் விற்பனை அபரிவிதமாக அதிகரித்த போதிலும், கோகோவின் உற்பத்தி மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் கோகோ சார்ந்த தொழில் நிறுவனங்கள் அனைத்தும் 50 முதல் 60 சதவிகிதம் இறக்குமதி செய்து வருகின்றன.

Courtesy: Dinamalar

கோகோ பயன்கள்
கோகோ தென்னைக்கு ஏற்ற ஒரு சிறந்த ஊடுபயிர். 3 முதல் 45 ஆண்டு வரை பலன் தரும். ஆண்டுக்கு கோகோ இலைகள் மூலம் எக்டேருக்கு 1000 முதல் 1200 கிலோ மண்ணில் அங்ககச்சத்து கூடுகிறது.

மண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கிறது. மண் அரிமானத்தைத் தடுக்கிறது. களைகளை கட்டுப்படுத்துகிறது.

கோகோ பழத்தின் ஓடு உரமாகவும், கால்நடை தீவனமாகவும் பயன்பட்டு வருகிறது. தென்னையில் மகசூல் அதிகரிக்கச் செய்கிறது. ஊடுபயிராக கோகோ பயிரிடுவதால் ஒரே நிலத்தில் இருந்து இரண்டு வருமானத்தைப் பெறலாம்.

கோகோ நடவு முறை
இரண்டு தென்னைக்கு நடுவில் ஒரு கோகோ. இரண்டு தென்னை வரிசைக்கு நடுவில் ஒரு கோகோ வரிசையாக குறைந்தது 10 அடி இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும்.

ஒரு ஏக்கர் நிலத்தில் 200 கோகோ நாற்றுகளை நடவு செய்யலாம்.

Courtesy: Dinamalar

 

தென்னையில் ஊடுபயிராக கோகோ பயிர் செய்ய விரும்புவோருக்கு தோட்டக்கலைத்துறை மானியம் வழங்குகிறது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலை தரமான, உயர் ரக நாற்றுக்களை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குகிறது.

கூடுதல் விபரம், மானியம் பெற மாவட்டம் தோறும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *