தென்னை சாகுபடி இயந்திரங்கள் – II

செயல்பாடு : தென்னை நாரிலிருந்து எரிகரி தயாரித்தல்

பண்புகள்:
மொத்த அளவுகள்:
765 x 350 x 990 மி.மீ
கொள்ளளவு: 125 கி.கி/மணிக்கு
தேவைப்படும் ஆற்றல்: 5  குதிரைத்திறன் (hp) மின்சார மோட்டார்.

பொதுவான தகவல்:  இந்த இயந்திரம் உட்செலுத்துவான், தொங்கும் கம்பித் திருகாணி, உருளை அமைப்பு, வெளிநோக்கிய அச்சுக்குழாய் போன்ற அமைப்புக்களைப் பெற்றிருக்கும்.  கம்பித் திருகாணியின் ஒரு முனை பந்து அமைப்பில் இணைக்கப்பட்டும் மற்றொரு முனை சாதாரணமாகத் தொங்கியவாறு விடப்பட்டிருக்கும்.  தாங்கியில் பொருத்தப்பட்டுள்ள உருளையினுள் இத்தொங்கும் கம்பித்திருகாணி விடப்பட்டிருக்கும்.  தொங்கும் திருகாணியின் சரிவான 30 செ.மீ முனையானது, அதே அளவுள்ள வெளிநோக்குக் குழாயினுள் செலுத்தப்பட்டிருக்கும்.  இத்திருகாணி வேகத்தடைப் பல்சக்கரத்துடன் (10:1) இரட்டிப்பாக அமைக்கப்பட்டுள்ளது.  இது 5 (hp) குதிரைத் திறன் மோட்டாரால் இயக்கப்படுகின்றது.  நார்த்தன்மை அற்ற தென்னை நார்க்கழிவுகளைப் பசுந் சாணத்துடன் 6:1 என்ற விகிதத்தில் கலந்து, தேவையான அளவு நீர் சேர்த்து உலர வைத்தபின் கரியாக (எரிபொருள்) அவை பயன்படுத்தப்படுகின்றன.

விலை: ரூ. 30,000/-
ஒரு முறைக்கான பயன்பாட்டுச் செலவு: ரூ 20/மணிக்கு

 

செயல்பாடு :  மேற்புற மண் மூடுதல்

பண்புகள்:

வகை: டிராக்டரால் செயல்படுவது உளிக்கலப்பையைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும்.
ஆற்றல் வகை: 35 முதல் 45 (hp) குதிரைத்திறன்  டிராக்டர்
சராசரி அளவுகள் :  840 x 1000 x 12390 மி.
எடை: 50 கி.கி
கொள்ளளவு: 0.5 ஹெ/நாளொன்றுக்கு

பொதுவான தகவல்: நார்க்குப்பை இடும் கருவியானது உளிக்கலப்பையைச் சுற்றி அமைந்துள்ளது.  இந்த உளிக்கலப்பை மண்ணை இயக்கி விடப் பயன்படுகிறது.  இது சற்று (உயர்ந்தவாறு) மேலெழுந்தவாறு உள்ள அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. தென்னை நார்க் குப்பையானது காற்றுத் திசைகாட்டி போன்ற சுழலும் பகுதி வழியே அடிப்பகுதிக்கு அனுப்பப்படுகின்றது.  ஒரு ஜோடி பாத்தி தோண்டும் கருவிகளை உளிக்கலப்பையின் பின்புறம் இறகுபோன்ற அமைப்பு  தாங்கிக் கொண்டுள்ளது.  இப்பாத்தி அமைப்பானே,  பாத்தியினுள் நார்க்குப்பையை இடும்.  சுழலக்கூடிய காற்றுத் திசைகாட்டி வடிவ அளவீட்டுக் கருவி இயக்குவதற்கு எளிதாக இருப்பதோடு ஒரே மாதிரியான சராசரி  அளவில் நார்க்குப்பையைப் பாத்தியினுள் இட உதவுகிறது.  இந்த அமைப்பில் மண் தன்மைக்கேற்ற அதாவது செம்மண் வகைக்கு 500 கிலோவும், கரிசல் மண்ணிற்கு 600 கிலோவும் குப்பை இடுவதற்குத் தேவையான சேமிப்பு அமைப்புகள் உள்ளன.

ஒரு கருவியின் விலை : ரூ. 8,500/-
சிறப்புப் பண்பு: குப்பையிடும் சீரான அளவு 90%
தயாரிப்பாளர்: தமிழ்நாடு வேளாண்மைப்  பல்கலைக்கழகம், கோயம்புத்துார்

 

செயல்பாடு:   மட்கிய உரத்திலிருந்து உருண்டைகள் தயாரித்தல்

அ) சராசரி அளவுகள்: 1000 x 900 x 900 மி.மீ
ஆ) கொள்ளவு: 100 கி.கி/மணி
இ) ஆற்றல் தேவை:   5 (hp) குதிரைத்திறன் மோட்டார்

பொதுவான தகவல்: மட்கிய எருவானது துளையிடும் திருகாணி அமைப்புள்ள உருளையினுள் அனுப்பப்படுகிறது.  இந்த திருகாணி மட்கிய எருவினை  சிறு துளை போன்ற அச்சினுள் அனுப்பி அதனை உருண்டையாக வெளித்தள்ளுகிறது.  சுழன்று கொண்டிருக்கும் கத்தியானது இவ்வுருண்டைகளை சிறு சிறு (அளவு) பகுதிகளாக நறுக்கிக் கொடுக்கின்றது.  இந்த உருண்டைகள் அதிர்வுடன் ஆடிக்கொண்டிருக்கும் தட்டு வழியே சென்று அடியில் சிறு (சிறு) உருண்டைகளாக சேகரிக்கப்படுகின்றன.

ஒரு கருவியின் விலை : ரூ.25,000/-
ஒரு முறை பயன்படுத்தும் செலவு : ரூ.15 \ மணிக்கு
தயாரிப்பாளர்:   தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்.

 

செயல்பாடு: தோப்பிலுள்ள தென்னை மரங்களுக்கு (இராசாயன) மருந்து  தெளித்தல்
பண்புகள் : 

  • வகை    :  உயர்த்தி அமைக்கப்பட்டுள்ள கருவி.
  • ஆற்றல் தேவை:  35 (hp) குதிரைத் திறன் டிராக்டர்.
  • மொத்த அளவுகள்:  65 x 65 x 1950 மி.மீ
  • எடை :  200 கி.கி.
  • கொள்ளளவு :  35 மரங்கள்/மணிக்கு

பொதுவான தகவல்கள்: இந்த அமைப்பு 9 மீ – 14 மீ உயரம் வரை நீளக்கூடிய (சுற்றி வைத்துக் கொள்ளக் கூடிய தொலைநோக்கு 162 & 37 மி.மீ)  G.I. பைப்புகளால் ஆனது.  இத் தொலைநோக்கு G.I. (பைப்) குழாயானது  ‘L’ கோணத்தில் ஒரு அமைப்பின் மீது பொருத்தப்பட்டுள்ளது.  இதன் 3 முனை இணைப்பு வளையம் மூலம் டிராக்டரால் நெம்பப்படுகிறது.  37 மி.மீ G.I. குழாயின் தலைப்பகுதியில் இரண்டு தெளிக்கும் துப்பாக்கிகள் தெளிப்பு முனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.  கூம்பு அல்லது ஜெட் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இம்முனைகள் கீழிருந்து கயிற்றை அசைக்கும்போது, தலைப்பகுதியும் (பற்றுகோல்) அசையும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.  அதோடு இத்தெளிப்பான்கள் தொலைநோக்குக் குழாயின் செங்குத்தாகச் சுழலும் வகையில் அமைந்துள்ளது.

விலை : ரூ. 45.000/-
தயாரிப்பாளர் : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *