தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளின் கவனத்திற்கு

தரமான கொப்பரை கிடைக்க 6 சதவீதத்திற்குள் ஈரப்பதம் இருக்க வேண்டும் என்று, தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் தெரிவித்துள்ளது.

தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் தரமான கொப்பரை கிடைக்க அறுவடைக்குப் பின் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து வாரியம் வெளியிட்டுள்ள செய்தி:

  • தேங்காய்கள் நன்கு முற்றிய பிறகு பறித்த பின் ஹைபிரிட் ரக வகைகளுக்கு 45 முதல் 60 நாள்களுக்குள்ளும், நாட்டு ரகங்கள் 45 முதல் 70 நாள்களுக்குள்ளும் உலர வைத்து, பின் உடைத்து வெயிலில் காயவைக்க வேண்டும்.
  • முதலில் மண்களத்தில் மூன்று நாள்களுக்கும், பின் கடப்பா கல்லில் சுமார் 4 முதல் 7 நாள்களுக்கும் (வெயிலின் அளவைப் பொருத்து) காயவைக்க வேண்டும்.
  • கொப்பரையின் ஈரப்பதம் 6 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும்.
  • பூஞ்சானத் தாக்குதல், கருப்பு, மஞ்சள் நிறமான தேங்காய்களை கழிவு செய்திட வேண்டும்.
  • தேங்காய்ப் பருப்பில் சுருக்கம் மற்றும் மடிப்பு 10 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • நன்கு உலர்ந்த பின் பருப்பில் படிந்துள்ள மணல், தூசி, சருகுகள் ஆகியவற்றை நீக்க வேண்டும்.
  • தேங்காய்ப் பருப்பு வெள்ளையாக இருக்க வேண்டும்.
  • உட்புறம் சவ்வுத்தாள் பொருந்திய சாக்குப் பைகளில் சேமித்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நவீன முறைப்படி, பாதுகாப்புடன் காயவைத்து, விற்பனைச் செலவுகள் இல்லாமல் கூடுதல் பயன் அடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தினமணி 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *