தென்னை சிவப்பு கூன் வண்டுகளை கட்டுப்படுத்துவது எப்படி?

தென்னையில் தாக்கும் சிவப்பு கூன் வண்டுகளை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து வேளாண் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டாரத்தில் தென்னை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், தென்னையை தாக்கும் சிவப்பு கூன் வண்டுகளை கட்டுப்படுத்தி, விளைச்சலைப் பெருக்க மானிய விலையில் வழங்கப்படும் இன கவர்ச்சி பொறி வாங்கி பயன்படுத்துமாறு கறம்பக்குடி வட்டார வேளாண் உதவி இயக்குநர் மனோகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

  • தென்னையைத் தாக்கும் பூச்சிகளான சிவப்பு கூன் வண்டு மற்றும் கான்டாமிருக வண்டு ஆகியன மரங்களின் மகசூலில் இழப்பை ஏற்படுத்தி வருகின்றன.
  • இதில் சிவப்பு கூன் வண்டால் தாக்கப்பட்ட தென்னை மரங்களின் தண்டு மற்றும் அடிப்பாகத்தில் துளைகள் காணப்படும்.
  • துளைகள் மூலம் வண்டுகள் தின்று வெளியேற்றிய நார் கழிவுகள் காணப்படும் துளைகளில் இருந்து செம்பழுப்பு நிற திரவம் வடிந்து கொண்டிருக்கும் பாதிக்கப்பட்ட மரத்தை தட்டினால் ஓசை கேட்கும் அளவுக்கு அறிகுறிகள் தென்பட்டால் தென்னை மரங்களை சிவப்பு கூன் வண்டுகள் தாக்கியுள்ளதை தெரிந்துகொள்ளாம்.
  • இவற்றைக் கட்டுப்படுத்த தென்னந்தோப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
  • மரங்களின் நுனிப் பகுதியை தேவையான இடைவெளியில் சுத்தப்படுத்த வேண்டும்.
  • மேலும் பச்சை மட்டைகள் வெட்டுவதைத் தவிர்க்க வெண்டும்.
  • இதைத் தவிர பெரோலூர் எனப்படும் இன கவர்ச்சி பொறிகளை ஏக்கருக்கு 2 வீதம் தென்னந்தோப்புகளில் வைத்து சிவப்பு கூன் வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம் என்றார்.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *