சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் பொருளாதாரத்துறை சார்பில் தென்னை தரும் விற்பனை வாய்ப்புகள் தலைப்பில் நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வரும் 31ம் தேதி நடைபெறும் பயிற்சி முகாமில் தென்னை உற்பத்தி தொழிலதிபர்கள், முன்னோடி விவசாயிகள், வேளாண் அறிஞர்கள் மற்றும் நுகர்வோர்கள் தென்னையில் உள்ள விற்பனை வாய்ப்புகள் பற்றி நேரடி விளக்கம் அளிக்க உள்ளனர்.
இம்முகாமில் பங்கேற்று பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பெயர், முகவரி, கல்வி தகுதி, புகைப்படம், மொபைல் எண் ஆகியவற்றை 5 ரூபாய் தபால் தலை ஒட்டப்பட்ட சுய விலாசமிட்ட உறையுடன்
ஒருங்கிணைப்பாளர் (தென்னை தரும் விற்பனை வாய்ப்புகள் பயிற்சி) வேளாண் பொருளாதாரத்துறை, வேளாண் புலம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அண்ணாமலை நகர் என்ற முகவரிக்கு
வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு வேளாண் பொருளாதாரத்துறை பேராசிரியர் சுந்தரவரதராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்