தென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராக கால்நடை தீவனமான “வேலிமசால்” பயிரிடலாம்.
- கால்நடை தீவனமாக புல்வகையை சேர்ந்த வேலிமசால் பயன்படுகிறது. இதற்கு கூவாப்புல், வேலிபுல் என பல பெயர் உள்ளது.
- விதை விதைத்த நான்காவது நாளில் செடி துளிர்த்துவிடும்.
- தென்னைக்கு காட்டும் தண்ணீரே காட்டினால் போதுமானது.
- விரைந்து வளரக்கூடிய இந்த புல் செடியை வெட்டி கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கலாம்.
- கால்நடைகளுக்கான தீவனம் குறைந்து வரும் இவ்வேளையில் இதுபோன்ற செடிகள் நல்ல லாபத்தை விவசாயிகளுக்கு ஈட்டித்தருகிறது.
- ஐந்தாண்டு வரை இந்த செடியிலிருந்து இலைகளை அறுக்கலாம்.
- செடியில் பச்சையம் சத்து அதிகளவு உள்ளதால் கால்நடைகளுக்கு மட்டுமல்ல, தென்னை மரத்துக்கு உரமாகவும் பயன்படுத்தலாம்.
- செடியின் ஒரு கிலோ விதை 650 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
- இதன்மூலமும் நல்ல வருவாய் கிடைக்கும்.
- தென்னை, பாக்கு, வாழைகளுக்கு இடையே இதை ஊடுபயிராக பயிரிடலாம்.
- இரும்புக்கலப்பை கொண்டு இரு முறையும், நாட்டுக்கலப்பை கொண்டு மூன்று அல்லது நான்கு முறையும் உழவேண்டும்.
- பார் பிடித்தல் 6 மீ நீளம் மற்றும் 1 மீ இடைவெளியில் பார் பிடித்து பார் களுக்கிடையில் வாய்க்கால்களை அமைக்க வேண்டும்.
- மண் பரிசோதனையின்படி உரமிட வேண்டும்.
- மண் பரிசோதனை செய்யாவிடில் (எக்டருக்கு) அடியுரமாக 10:60:30 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து இடவும்.
- விதை அளவு – தீவனத்திற்கு எக்டருக்கு 10 கிலோ.
- விதைகளை அடர் கந்தக அமிலத்தில் மூன்று நிமிடம் ஊறவைத்து விதைகளை நன்கு கழுவிய பின் குளிர்நீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.
- அல்லது விதைகளை வெந்நீரில் நான்கு நிமிடம் ஊறவைத்து பின் குளிர்நீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.
- மேலும் எளிய முறையாக பாத்திரத்தில் நீரை 100 செ.கி.க்கு கொதிக்கவைத்து பின் 4 நிமிடம் ஆறவைத்து (80 செ.கி) விதைகளை 3-4 நிமிடம் ஊறவைக்க வேண்டும். அடுத்து சூடான நீரை வடித்துவிட்டு குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.
- விதைகளை 72 மணி நேரம் குளிர்ந்த நீரில் ஊறவைத்தும் வைக்கலாம். விதைநேர்த்தி செய்தபின் ரைசோபியம் உயிர் உரத்தை அரிசிக்கஞ்சியில் கலந்து காயவைத்தபின் விதைக்க வேண்டும்.
நீர் மேலாண்மை:
- பாசன பகுதிகளில் வளர்க்கப்படும் பயிர்களுக்கு நீர் மேலாண்மை செய்திட வேண்டும். வளர்ச்சியடைந்துவிட்டால் சில மாதங்களின் வறண்ட சூழ்நிலையையும்கூட தாக்குப்பிடித்து விடும். இருந்த போதிலும் விரைவான இளஞ்செடிகளின் வளர்ச்சிக்கு நிலத்தில் 5 முதல் 6 மாதங்கள் வரை ஈரம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
அறுவடை:
- நட்டபின் 6 மாதத்திற்கு பிறகு அறுவடை செய்யலாம்.
- தண்டின் விட்டம் 3 செ.மீ. அடைந்தவுடன் (அல்லது) ஒருமுறை விதை உற்பத்திக்கு விட்டவுடன் முதல் அறுவடை செய்யலாம்.
- அதற்கு பிறகு 40-80 நாட்களில் வளர்ச்சி மற்றும் பருவத்திற்கேற்ப அறுவடை செய்யலாம்.
- வறட்சி அதிகமுள்ள பகுதிகளில் மரத்தை இரண்டு முதல் மூன்று வருடத்திற்கு அறுவடை செய்யாமல் விட்டுவிட வேண்டும். மரத்தை தரைமட்டத்திலிருந்து 90-100 செ.மீ. உயரம் விட்டு அறுவடை செய்ய வேண்டும்.
- பூட்டு மற்றும் எரிபொருளாக பயன்படுத்த மரத்தை 2.5 அல்லது 5 வருடத்திற்கு வெட்டாமல் பக்கக்கிளைகளை அகற்றிவிட வேண்டும்.
தொடர்புக்கு: ஆர்.ஜி.ரீஹானா, அக்ரி கிளினிக், 268/77, பழைய ஹவுசிங் யூனிட், தாராபுரம்-638 657.
ஆர்.ஜி.ரீஹானா, தாராபுரம், 08903757427.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்