தென்னை மரங்களுக்கு ஊடுபயிராக பசுந்தாள்

தென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராக பசுந்தாள் பயிரிடலாம் என்று விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை அதிகாரி அறிவுரை வழங்கி உள்ளார்.

பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய பகுதியில் சாகுபடி பரப்பளவு 13 ஆயிரத்து 718 ஹெக்டேர் ஆகும். மற்ற பயிர்களை விட தென்னை சாகுபடியில் அதிக வருமானம் கிடைக்கிறது. தென்னையில் தேங்காய் தவிர உரிமட்டை, சிரட்டை, தென்னை ஓலை ஆகியவற்றின் மூலமும் லாபம் பெறலாம். மற்ற பயிர்களை விட வேலை ஆட்கள் குறைவாக தேவைப்படுவது உள்பட பல்வேறு காரணங்களால் தென்னை சாகுபடியில் ஈடுபட விவசாயிகள் அதிகம் விரும்புகின்றனர்.

இது குறித்து தெற்கு ஒன்றிய வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் பெருமாள்சாமி, கூறியதாவது:-

பருவமழையை பயன்படுத்தி தென்னை மரங்களுக்கு உரமிடுதல் நல்லது. தென்னைக்கு உயிர் உரங்களான அசோஸ் பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா இட வேண்டும். ஒரு மரத்திற்கு ஆண்டிற்கு 200 கிராம் வீதம் கலந்து மரத்தை சுற்றி 3 அடி சுற்றளவில் ½ அடி ஆழத்தில் வட்ட பாத்தி அமைத்து உயிர் உரங்கள் இட வேண்டும். இதையே பாதியாக பிரித்து 6 மாதத்திற்கு அரை வட்டப்பாத்தி அமைத்து இட வேண்டும். உயிர் உரம் இடும் போது ரசாயன உரத்தை கலக்க கூடாது.

பின்னர் 30 நாள் இடைவெளியில் தென்னை நுண்ணூட்டம் இட வேண்டும். ரசாயன உரத்தை பயன்படுத்துவதாக இருந்தால் ஒரு மரத்திற்கு ஆண்டிற்கு 1.30 கிலோ யூரியா, 2 கிலோ சூப்பர் பாஸ்பேட், 2 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றை கலந்து இட வேண்டும்.

தென்னந்தோப்பில் மரங் களுக்கு இடையே தழைச்சத்து அதிகரிக்க சணப்பை, தக்கை பூண்டு போன்ற பசுந்தாள் உரப்பயிர்களை ஊடுபயிர்களாக பயிரிடலாம்.

பசுந்தாள் உரப்பயிர்கள் காற்றில் உள்ள நைட்ரஜனை எடுத்து வேர் முடிச்சுகளில் சேகரித்து நிலத்திற்கு தழைச்சத்தை அதிகரிக்கின்றன. பயிர் வளர்ச்சிக்கு தழைச்சத்து அவசியமாகும்.

நன்றி: தினத்தந்தி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “தென்னை மரங்களுக்கு ஊடுபயிராக பசுந்தாள்

 1. Appajiraman says:

  வணக்கம் ஐயா,
  எங்கள் பகுதியில் உள்ள உழவர்கள் சேர்ந்து கடலூரில் “அன்னை தேசிய வேளாண்மை திட்ட விவசாயிகள் சங்கம்” என்ற பெயரில் சங்கம் வைத்து விவசாய தொண்டு செய்து வருகிறோம்…
  வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைத்துறை இயக்குனர் மற்றும்
  ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்கும் “நெல் திருவிழா மற்றும் கண்காட்சி” வரகால்பட்டில் நடைபெற உள்ளது..
  அதற்கான அழைப்பிதழ்அனுப்ப உள்ளோம்.. எந்த விலாசத்திற்கு அனுப்ப வேண்டும்…
  அல்லது மெயில் id தெரிவிக்கவும்….தங்கள் இதழில் முன் கூட்டியே
  விழா குறித்து தெரியப்படுத்தினால் இயற்கை விவசாய உழவர்களுக்கு உதவியாய் இருக்கும் என நம்புகிறோம்…
  நன்றி..
  – M. சேகர், தலைவர் – 7598107567

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *