இப்போதேல்லாம் தென்னை மரத்தில் இருந்து தேங்காய் பறிக்க ஆளே கிடைப்பதில்லை. மரத்தில் இருந்து நேராக கீழே விழுந்தால் சரி! சமீபத்தில் கேரளா சென்ற போது அங்கே தென்னை மரத்தில் இருந்து தேங்காய் விழுந்து தலையை உடைக்காமல் இருக்க நெட் கட்டி இருப்பதை .பார்த்தேன். இந்த சூழ்நிலையில் ஒரு பெண் தைரியமாக தென்னை மரம் ஏறும் பயிற்சி எடுத்து அதை தொழிலாக எடுத்து கொண்டுள்ள ஒரு ரிப்போர்ட்- தினமலர் இருந்து
தென்னை மரம் ஏறும், திண்டுக்கல் மாவட்டம், நொச்சி ஓடப்பட்டியை சேர்ந்த செல்வராணி கூறுகிறார்:

- எங்கள் குடும்பத்தில் யாருக்குமே, தென்னை மரம் ஏறத் தெரியாது. என் கணவர், விவசாயி. இரு குழந்தைகளின் பள்ளி கட்டணம் கட்டவே கஷ்டப்பட்டோம்.
- ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், எம்.எஸ்.சுவாமிநாதன் பவுண்டேஷன், எங்கள் கிராமத்தில், மிஷின் மூலமாக தென்னை மரம் ஏறும் பயிற்சி கொடுக்க வந்தனர். பயிற்சியில், நான் மட்டுமே பெண் என்பதால், ஊர்க்காரர்கள் என்னை பார்த்து சிரித்தனர்.
- மொத்தம், ஆறு நாள் பயிற்சி. ஏதாவது ஒரு தொழிலை கற்று, வாழ்க்கையின் வறுமையை போக்கிக் கொள்ள வேண்டும் என்ற வெறியோடு இருந்ததால், தென்னை மரம் ஏறும் பயிற்சி கொடுத்த முதல் நாளே, நன்றாக கற்றுக் கொண்டேன். முதன்முதலில் மரத்தின் உச்சிக்குப் போன போது, அப்படி யொரு மகிழ்ச்சியும், சந்தோஷமும் ஏற்பட்டது. மரம் ஏறக் கற்றுக் கொண்டதும், ஒன்பது கிலோ எடையுள்ள இந்த மிஷினையும், பவுண்டேஷனில் எனக்கு இலவசமாக கொடுத்தனர்.
- மரம் ஏறும் மிஷினில், இரு கயிறுகள் இருக்கும். முதலில், அந்த கயிறுகளை தென்னை மரத்தில் கட்டிவிட்டு, காலில் பெல்ட் மாதிரி இருப்பதை அழுத்தியபடி இருந்தால், சைக்கிள் மாதிரி மரத்தின் மேலே சென்று விட முடியும். மரத்தின் உச்சிக்குப் போனதும், அந்த மிஷினிலேயே உட்கார்ந்து, தேங்காய் வெட்டலாம், மட்டையையும் கழிக்கலாம்.
- ஆரம்பத்தில் பலர் தயங்கிய நிலையில், ஆண்களை விட மிக சிறப்பாக மரம் ஏறுவதைப் பார்த்த பின், என்னை அழைக்க ஆரம்பித்தனர். நாள் ஒன்றுக்கு, 20 – 30 மரம் வரைக்கும் ஏறுவேன். தேங்காய் பறிக்கவோ, களை பறிக்கவோ ஒரு மரத்துக்கு, 20 ரூபாய் தான் கூலி வாங்குவேன். எங்கள் ஊருக்கு பக்கத்தில் இருக்கும், 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், நிறைய தென்னை மரங்கள் உள்ளன.
- தென்னை மரத்தின் மட்டையைப் பார்த்தே, அதன் கண்டிஷனை சொல்லி விடுவேன். உதாரணத்துக்கு, மட்டை நேராக இல்லாமல், ‘வி’ வடிவத்தில் இருந்தால், காண்டாமிருக வண்டு, மரத்தை தாக்கியிருக்கிறது என, அர்த்தம். அதேபோல், வேர்ப்பூச்சி தாக்கி இருந்தாலும் தேங்காய் சரியாக காய்க்காது. தென்னை மரங்களை எப்படி செழிப்பான மரங்களாக மாற்றுவது என்பது குறித்தும், மரத்தின் உரிமையாளர்களிடம் ஆலோசனை கொடுப்பேன்.
- மரம் ஏறும்போது தேரை, தேள், சாரைப் பாம்பு, கொம்பேறி மூக்கன் பாம்புன்னு நம்மை மிரட்டுவதற்கென்றே குடியிருக்கும். அதைப் பார்த்து பயப்படாமல், தைரியமாக இருந்தோம் எனில், அவை நம்மை பார்த்து பயந்து ஓடிடும்!!
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
அந்த மிசின் எங்க கிடைக்கும்
கோவையில் உள்ள தமிழ் நாடு வேளாண் பலகலை கழகத்தில் கிடைக்கும்
மேலும் தகவலுக்கு இங்கே படிக்கவும்:
http://goo.gl/qDLIuH
http://goo.gl/S3pBp2
http://goo.gl/fsr82s