தென்னை மர வண்டுகளை ஒழிக்க வழிமுறை

தென்னை, பாக்கு மரங்களை அழிக்கும் வண்டுகளை ஒழிக்கும் வழி முறைகளை வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் இளங்கோவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

  • தென்னை, பாக்கு மரங்களை சிவப்பு கூண் வண்டு, காண்டாமிருக வண்டு போன்றவை தாக்கி அழித்து வருகின்றன.
  • இவற்றை இனக்கவர்ச்சிப் பொறிகள் உதவியால் எளிதில் அழிக்கலாம்.
  • `லூர்`எனப்படும் பொன்வண்டுகளின் உடலில் இருந்து வெளிவரும் ஒருவித ஹார்மோன் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு குப்பிகளில் தரப்படுகிறது. அதை வாங்கி இனக்கவர்ச்சிப் பொறியில் வைக்க வேண்டும்.
  • அந்த ஹார்மோன் 3 மாதம் வரை காற்றில் கற்பூரம் போல கரைந்து ஒருவித வாசனையை வெளியிடும்.
  • அந்த வாசனையில் கவரப்படும் வண்டுகள் தானாக வந்து பொறியில் இருந்து வெளிவரும் வாசனையை நுகர்ந்து, பின்னர் வைக்கப்பட்டுள்ள பக்கெட்டில் உள்ள விஷத்தால் சாகும். இதன் மூலம் தென்னை, பாக்கு மரங்கள் காப்பாற்றப்பட்டு கூடுதல் மகசூல் பெறலாம்.
  • பொதுவாக இளங்கன்றுகள் சாகுபடி செய்தவர்கள் முதல் உயரமான கன்றுகள் வைத்தவர்கள் வரை மரத்துக்கு பரிந்துரைபடி உரம் இடாமல் இருந்தாலோ, நீர் பாய்ச்சாமல் இருந்தாலோ மகசூல் குறையும்.
  • அந்த இடத்தில் கூட இத்தகையை வண்டுகள் 30 முதல் 80 சதவீதம் வரை மரத்தை தாக்கி கடும் சேதத்தை விளைவிக்கின்றன. எனவே இனக்கவர்ச்சிப் பொறியை விளக்குப் பொறியுடன் சேர்த்து நிரந்தரமாக வைத்து தென்னை, பாக்கு மரங்களை பாதுகாக்கலாம்.
  • இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *