தென்னை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம்

தூத்துக்குடி அருகே உள்ள வாகைக்குளம் ஸ்காட் வேளாண் அறிவியல் மையத்தில் தென்னை மரத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மற்றும் மரம் ஏறும் கருவி கொண்டு மரம் ஏறும் பயிற்சியின் முதல் கட்ட 6 நாட்கள் இலவச பயிற்சி முகாம் நடந்தது.
வாகைக்குளம் ஸ்காட் வேளாண் அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் அழகுகண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது :

  •  தூத்துக்குடி மாவட்டத்தில் தென்னையில் பூச்சி நோய் தாக்குதல் மற்றும் அறுவடைக்கு ஆள் பற்றாக்குறையை போக்கும் விதத்தில் வாகைக்குளம் ஸ்காட் வேளாண் அறிவியல் மையம், மற்றும் சென்னை தென்னை வளர்ச்சி வாரியம், இணைந்து மேலும் 2 கட்ட இலவச பயிற்சி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இப்பயிற்சியில் 18 யிலிருந்து 45 வயதுடைய விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்
  • மேலும் வரும் வாரத்தில் 2ம் கட்ட பயிற்சி 2013 (நவம்பர்) 18 முதல் 23ம் தேதி வரை 6 நாட்கள், மற்றும் 3ம் கட்ட பயிற்சி 2013 நவம்பர் 25ம் தேதி முதல் 30ம் தேதி 6 நாட்கள் வரை இலவச பயிற்சியாக நடைபெற உள்ளது.
  • எனவே கிராமப்புற இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். க
  • லந்து கொண்டு பயிற்சி பெறும் அனைவருக்கும் ரூ4500 மதிப்புள்ள தென்னை மரம் ஏறும் கருவி இலவசமாக வழங்கப்படும்.
  • மேலும் விரிவான தொடர்புக்கு 09942978580 மற்றும் 07598869175 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொண்டு பயன் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *