திருவனந்தபுரம்: மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் அறிமுகமானது முதல், நாடு தழுவிய அளவில், விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாகி விட்டது.
குறிப்பாக, தென்னை மரம் ஏறி தேங்காய் பறிக்க யாரும் வருவதில்லை.
அப்படியே வந்தாலும், அவர்கள் கேட்கும் கூலி, விவசாயிகளுக்கு கிலி ஏற்படுத்துவதாக உள்ளது.
தேங்காயை பறித்து, இழப்பை சந்திப்பதை விட, “தானாக காய்த்து விழட்டும், கொப்பரையாவது தேறும்’ என்ற மனநிலைக்கு விவசாயிகள் ஆளாகி உள்ளனர்.
இதனால், ஒரு காலத்தில் தேங்காய் உற்பத்தியில் உச்சத்தில் இருந்த கேரளா, தற்போது தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களை சார்ந்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
என@வ, தேங்காய் பறிக்க, குரங்குகளுக்கு பயிற்சி அளித்து பயன்படுத்தலாமா என்று கேரள வேளாண் அமைச்சகம் திட்டமிட்டு வருகிறதுஇலங்கை, இந்தோனேஷியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் குரங்குகள் மூலம் தேங்காய் பறிப்பது வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
இந்த முறையைப் பின்பற்றுவதிலும் பிரச்னை உள்ளது.
“குரங்குகளை துன்புறுத்தாதே’ என பிராணிகள் நல அமைப்புகள் கொடி தூக்கினால் என்ன செய்வது என கேரளா அரசு அஞ்சுகிறது. இதனால், குரங்கு மூலம் தேங்காய் பறிக்கும் திட்டம் பரிசீலனை அளவிலேயே இருந்து வருகிறது!!
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்