பெரியகுளம் பகுதிகளில் குறுகிய கால செவ்விளநீர் தென்னங்கன்றுகள் அதிகளவில் நடவு செய்யப்படுகிறது.பெரியகுளம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை மரங்கள் உள்ளன.
- தற்போது பெரியகுளம் பகுதியில் குறுகிய காலத்தில் பலன்தரும் செவ்விளநீர் தென்னங்கன்றுகள் நடுவது அதிகரித்துள்ளது.
- இவை நடவு செய்யப்பட்ட 3 ஆண்டுகளில் பலன் கொடுத்து விடும்.
- இவ்வகை தென்னை மரங்களில் 45 நாட்களுக்கு ஒருமுறை இளநீர் வெட்டப்படுகிறது.
- மரத்தின் வாழ்நாள் 35 ஆண்டுகளாகும்.
- இந்தவகையான மரங்களில் இளநீர் மட்டும் கிடைக்கும்.
- இளநீர் ஒன்று 20 முதல் 25 ரூபாய் வரை விற்கப்படுவதால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது.
- குறைந்த ஏக்கர் நிலப்பரப்பு உள்ளவர்கள் கூட அதிகளவில் செவ்விளநீர் தென்னங்கன்றுகளை வளர்ப்பதில் ஆர்வமாக உள்ளனர்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்