“”வறட்சியை தாங்கி வளரும் தென்னை ரகங்கள் கண்டறியப்பட்டு, விவசாயிகள் தேவைக்காக ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது,” என ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் சீனிவாசன் பேசினார்.
உடுமலை அருகே பெரியகோட்டை கிராமத்தில், வட்டார வேளாண் விரிவாக்க மையம் சார்பில் உழவர் பெருவிழா நடந்தது.ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் சீனிவாசன் பேசியதாவது:
ஆழியாறு ஆராய்ச்சி நிலையத்தில், தென்னை விவசாயிகள் நலனுக்காக பல புதிய ரக தென்னை நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
- தற்போது, வறட்சியை தாங்கி வளரும் டிப்தூர் நெட்டை மற்றும் அரசம்பட்டி நெட்டை ஆகிய இரண்டு ரகங்கள் மையத்தில் விவசாயிகளுக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
- தென்னையில், 5 முதல் 6 வயது வரை காண்டாமிருக வண்டு தாக்குதல் காணப்படும்.இவ்வண்டு, குருத்தை ஆங்கில, எழுத்து “வி’ வடிவில், கத்தரிப்பதே நோய் தாக்குதலின் அடையாளமாகும்.
- இளங்குருத்தில், 2 மாதங்களுக்கு ஒரு முறை இரண்டு நாப்தலீன் உருண்டைகளை இட வேண்டும். மேலும், “போரேட்’ என்ற குருணை மருந்தினை ஒரு மரத்திற்கு 10 கிராம் என்ற அளவில் பொட்டலத்தில் இட்டு, அதை துளையிட்டு, குருத்தில் செருகி வைக்க வேண்டும்.
- கருந்தலைப்புழுவை கட்டுப்படுத்த தென்னை ஆராய்ச்சி நிலையத்தில், ஒட்டுண்ணி கிடைக்கிறது.
- ரசாயன முறைக்கு மாற்று முறையாக உயிரியல் முறையில், நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் முறையாக உள்ளது.
- மேலும், அடித்தண்டு அழுகல், குருத்தழுகல் நோயை கட்டுப்படுத்தும், சூடோமோனஸ் மற்றும் டிரைகோடெர்மா பூஞ்சாண கொல்லிகள் ஆராய்ச்சி நிலையத்தில் கிடைக்கிறது.
- சிவப்பு கூன் வண்டு மற்றும் காண்டாமிருக வண்டுகளை ‘கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்துகளை தவிர்த்து, இனக்கவர்ச்சி பொறிகளை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம் இவ்வாறு பேசினார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்