தாடிக்கொம்பு மாரம்பாடி அருகே பூத்தாம்பட்டியை சேர்ந்தவர் பிரவீன் டைட்டஸ். பி.இ., கம்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார்.
தற்போது, மிக குறைந்த செலவில், 12 மாதங்களும் கடலை சாகுபடி செய்து, மற்ற விவசாயிகளுக்கு முன்னோடியாக திகழ்கிறார்.
அவர் கூறியது:
- கடலையில், பழைய முறையான பாத்தி கட்டி சாகுபடி செய்வதில், மூன்றில் கால்பங்கு வரப்பு மற்றும் பாத்திக்கே வீணாகிவிடும்.
- ஆனால், புது முறையில் பாத்தி இல்லாத சமநிலத்தில் கடலை நடவு செய்வதால், நிலம் வீணாவது தவிர்க்கப்படும்.
- மேலும், பாத்தி முறையில் 15 நாட்களில் முதல் களை, 45 நாட்களில் இரண்டாம் களை எடுத்தல் மற்றும் உரமிடுதல், 90 நாட்கள் கழித்து அறுவடை செய்யலாம்.
- புது முறையில் இரண்டாம் களை மற்றும் உரம் இட்டு, அறுவடை செய்துவிடலாம்.
- நிலத்தை உழவு செய்யும் போதே, இயந்திரம் கொண்டு கடலை நடவு செய்வதால், மண்ணின் ஈரப்பதம் குறையாமல் இருக்கும்.
- இதனால் 12 மாதங்களும் கடலை சாகுபடி செய்யலாம்.
- அரசின் மானிய விலையில் தெளிப்பான்களை வாங்கி நிலம் முழுவதும் அமைத்து விட்டால், நீர் பாய்ச்சவும் ஆட்கள் தேவையில்லை.
- இதனால் பாத்தி முறையை விட பல மடங்கு செலவு குறைவு. அதிக லாபம் கிடைக்கும்
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்