நம் நாட்டில் கடலை ஒரு முக்கியமான எண்ணெய் வித்து பயிர். தமிழ்நாட்டில் பல இடங்களில் இது பயிர் இடபடுகிறது. ஆனால், கடலை செடியில் இருந்து கடலை பருப்புகளை எடுப்பது என்பது ஒரு கஷ்டமான வேலை. சாகுபடி செய்த செடிகளை, தரையில் அடித்தோ கல்லில் அடித்தோ, பிரித்து எடுக்க வேண்டும். அப்படி செய்யும் போதுஉள்ளே இருக்கும் கடலை பருப்பு உடைய வாய்புகள் அதிகம். அப்படிப்பட்ட கடலைகளை, எண்ணெய் எடுக்க பயன் படுத்த முடியாது. இதனால், விவசாய்கள் பாதிக்கபடுகின்றனர்.
இந்த பிரச்சனையை தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம் ஒரு இயந்திரம் மூலம் தீர்த்து வைத்திருக்கிறது. கேரோசினில் வேலை செய்யும் இந்த இயந்திரத்தினால், ஒரு எகரில் அறுவடை செய்த கடலை செடிகளை ஒரே நாளில் பிரித்து எடுக்க முடியும். செடிகளும், இலை பகுதிகளும் பாதிக்காமல் பிரித்து எடுப்பதால், அவை எருவிற்கு பயன் படுத்தலாம். இந்த இயந்திரம் ரூ 19000 விலை.
ஆர்டர் செய்தால், தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம் சப்ளை செய்ய தயார்.
விவரங்களுக்கு அணுக வேண்டிய முகவரி:
Dr R மணியன், வேளாண்மை பொறியியல் கல்லூரி , தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம் கோவை. தொலை பேசி: 04225511352.
நன்றி: ஹிந்து (ஆங்கிலத்தில்)
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்