நிலக்கடலை அதிகம் மகசூல் பெறுவது எப்படி?

நிலக்கடலை பயிருக்கு உரக்கலவை கரைசல் தெளித்தல் மற்றும் ஜிப்சம் இடுதல் குறித்து தென்காசி வேளாண்மை உதவி இயக்குநர் விளக்கியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நிலக்கடலை பயிரில் அதிக விளைச்சல் பெற உரக்கலவை கரைசல் தெளித்து ஜிப்சம் இடுவது அவசியம். நிலக்கடலையில் வெற்று காய்கள் உருவாவது பெரிய பிரச்னையாக இருகுகிறது. கடலை திரட்சியாக உருவாக உரக்கலவை கரைசல் தயாரித்து தெளிக்க வேண்டும். உரக்கலவை கரைசல் தயாரிக்க டி.ஏ.பி.10 கிலோ, அம்மோனியம் சல்பேட் 400 கிராம், போராக்ஸ் 200 கிராம் 15 லிட்டர் தண்ணீரில் நன்றாக கலந்து இரவு முழுவதும் வைக்க வேண்டும். மறுநாள் காலையில் கிடைக்கும் 13 லிட்டர் கரைசலுடன் 187 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஒரு ஏக்கர் பரப்பில் பயிருக்கு தெளிக்க வேண்டும். பிளானோபிக்ஸ் 140 மில்லியையும் உரக்கரைசலில் கலந்து தெளிக்கலாம். விதைத்த 25 மற்றும் 35வது நாளில் இந்த உரக்கரைசலை தெளிப்பதால் திரட்சியான கடலை பருப்பு கிடைக்கும்.ஒரு ஏக்கர் நிலக்கடலை பயிருக்கு 160 கிலோ ஜிப்சம் தேவை.

இதனை விதைத்த 40 முதல் 45வது நாளில் இட வேண்டும். களையெடுத்த பின் ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும். மண் ஈரமாக இருக்கும் போது ஜிப்சம் இட்டால் முழு பலன் கிடைக்கும். நிலக்கடலைக்கு ஜிப்சம் இடுவதால் பயிருக்கு கால்சியம் மற்றும் சல்பர் சத்து போதுமான அளவில் கிடைத்து நிலக்கடலை விழுதுகள் மண்ணில் öளிதாக இறங்கி அதிக எண்ணிக்கையில் கடலை உருவாவதோடு அல்லாமல் திரட்சியாகவும் கடலை கிடைக்கிறது. மேலும் எண்ணெய் சத்து அதிகமாக கிடைக்கும் என அறிக்கையில் வேளாண்மை உதவி இயக்குநர் கூறியுள்ளார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *