நிலகடலை சாகுபடி டிப்ஸ்

நிலக்கடலையில் தோன்றும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை கையாள வேண்டும்.

 • எண்ணெய் வித்துப்பயிர்களில் முக்கியமான பயிரான நிலக்கடலை பயிர் கோடை பருவத்தில் ஜூன், ஜூலை மாதங்களிலும், கார்த்திகைப் பட்டத்தில் நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் பயிரிடப்படுகிறது.
 • டி.எம்.வி.,7, வி.ஆர்.ஐ.,1, கோ 1 போன்ற ரகங்கள் பெரும்பாலும் இந்த பருவத்தில் பயிரிடப்படுகிறது.
 • நிலக்கடலை பயிர் சாகுபடி செய்ய முதலில் நிலத்தை டிராக்டர் மூலம் நன்கு உழவு செய்ய வேண்டும்.
 • நன்கு உழுது பண்படுத்திய நிலத்தில் ஏக்கருக்கு ஐந்து டன் மக்கிய தொழு உரம் கடைசி உழவுக்கு முன் இடவேண்டும்.
 • முறைப்படி மண் பரிசோதனை செய்து பரிந்துரைப்படி உரமிட வேண்டும். அல்லது பொதுமான உரபரிந்துரையாக இறவை நிலக்கடலைக்கு தழை, மணி, சாம்பல் சத்து ஏக்கருக்கு முறையே 7:14:21 கிலோ என்ற அளவில் இடவேண்டும்.
 • நிலக்கடலை நுண்ணூட்ட கலவையினை ஏக்கருக்கு ஐந்து கிலோ அளவில் மண்ணுடன் கலந்து 20 கிலோவாக விதைப்புக்கு பின் மேலாக தூவிவிட வேண்டும்.
 • விதையளவாக இறவை நிலக்கடலை பயிருக்கு ஏக்கருக்கு 50 கிலோ விதை பருப்பு தேவைப்படும்.
 • வரிசைக்கு வரிசை 30 செ.மீ., மற்றும் செடிக்கு செடி 10 செ.மீ., இடைவெளியில் விதைப்பு செய்ய வேண்டும்.
 • நன்கு முற்றிய தரமுள்ள பூச்சி, நோய் தாக்காத விதை பருப்பை தேர்ந்தெடுக்க வேண்டும்.
 • ஒரு கிலோ விதைக்கு நான்கு கிராம் டிரைகோடெர்மா விரிடி என்ற எதிர் உயிர் பூஞ்சானக்கொல்லி கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
 • விதைப்புக்கு முன் நிலைக்கடலை விதைகளை தரம் பிரிக்க நன்கு நனைக்கபபட்ட பைகள் மீது விதைகளை பரப்பி அதன் மீது நன்கு நனைத்த சணல் பைகளை 20 மணி நேரம் மூடி வைத்திருக்க வேண்டும். பின் முளைப்பு தோன்றிய விதைகளை மட்டும் எடுத்து நிழலில் உலர்த்தி விதைப்பதன் மூலம் 95 சதவீதம் முளைப்புத்திறன் அடையலாம்.
 • களை நிர்வாகமாக களைகளை கட்டுப்படுத்த இறவை நிலக்கடலை பயிருக்கு புளுகுளோரலின் ஏக்கருக்கு 800 மி., என்ற அளவில் விதைத்த மூன்று நாட்களுக்குள் தெளிக்க வேண்டும்.
 • நிலக்கடலை இறவை பயிருக்கு நீர் நிர்வாகம் மிகவும் இன்றியமையாத ஒன்று. நிலக்கடலை பயிரின் வளர்ச்சி நிலைகளை பொறுத்து நீர் பாய்ச்ச வேண்டும்.
 • விதைத்த உடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின் நான்கு ஐந்து நாட்கள் கழித்து உயிர் நீர் பாய்ச்ச வேண்டும். பக்கக்கிளை தோன்றும் சமயத்தில் இரண்டு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.
 • ஏக்கருக்கு 160 கிலோ அளவில் 45வது நாளில் ஜிப்சம் இட்டு செடிகளை சுற்றி மண்அணைக்க வேண்டும்.
 • நிலக்கடலையில் தோன்றும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை ஆரம்பம் முதலே கண்காணித்து ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும்.

இவ்வாறு வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *