“நிலக்கடலை பயிரில், அதிக மகசூல் பெற தேவையான அளவு ஜிப்சம் இட வேண்டும்’ என, மோகனூர் வேளாண் உதவி இயக்குனர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:
- இறவை நிலக்கடலைக்கு ஒரு ஏக்கர் விதைப்புக்கு, 50-55 கிலோ திரட்சியான விதைப்பருப்பு தேவைப்படும்.
- கோ-3, டி.எம்.வி.7, வி.ஆர்.ஐ. 2 போன்ற ரகங்கள், பயிரிடலாம்.
- ஒரு ஏக்கர் விதைக்கு, இரண்டு பொட்டலம் ரைசோபியம் மற்றும் இரண்டு பொட்டலம் பாஸ்போ பாக்டீரியா நுண்ணுயிர் கலவையுடன், 200 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி பூஞ்சானம் கலந்து, 20 நிமிடம், நிழலில் உலர்த்தி விதை நேர்த்தி செய்ய வேண்டும்.செடிகள் வரிசைக்கு வரிசை 30 செ.மீ., இடைவெளியும், பயிருக்கு பயிர், 10 செ.மீ., இடைவெளியும் இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.
- நிலக்கடலைக்கு ஒரு ஏக்கருக்கு, 10:20:30 கிலோ, தழை:மணி:சாம்பல் சத்து தரக்கூடிய உரங்களையிட வேண்டும். தழை மற்றும் சாம்பல் சத்தில், 50 சதம் அடியுரமாகவும், 25 சதம் விதைத்த, 20வது நாளில் மேலுரமாகவும், 25 சதவீத்தை 45வது நாளில் மேலுரமாகவும் இடவேண்டும்.
- மேலும், ஏக்கருக்கு, 80 கிலோ ஜிப்சம் அடியுரமாகவும், 80 கிலோ ஜிப்சம், 45வது நாளில், மேலுரமாகவும் இடவேண்டும். அதனால், மண் பொலபொலப்பாகி, பொக்குக்காய்கள் இல்லாமல், அதிக எண்ணிக்கையிலான, திரட்சியான காய்கள் கிடைக்கும்.
- இலைவழியாக, ஒரு ஏக்கருக்கு டிஏபி ஒரு கிலோ, அம்மோனியம் சல்பேட் 0.4 கிலோ, போராக்ஸ், 200 கிராம் ஆகியவற்றை, ஒரு நாள் இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் தெளிந்த நீரை வடிகட்டி தண்ணீர் மற்றும் ஒட்டம் திரவம் கலந்து தெளிவிக்க வேண்டும்.
- அவற்றை, 25வது, 35வது நாட்களில், இரண்டு முறை தெளிக்க வேண்டும்.
- அதனால், திரட்சியான மணிகள் கிடைக்கும். நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறையை போக்க, ஐந்து கிலோ நிலக்கடலை நுண்ணூட்டத்தை, 20 கிலோ மணலுடன் கலந்து கடலை விதைப்புக்கு பின் சீராக தூவவேண்டும்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்