தர்மபுரி மாவட்டத்தில், நிலக்கடலை பயிர் உயர் விளைச்சலுக்கான தொழில் நுட்பங்கள் குறித்து, வேளாண் துறை அறிவுரை வழங்கியுள்ளது.
உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குனர் மேகநாதன் வெளியிட்ட அறிக்கை:
- தர்மபுரி மாவட்டத்தில், அதிக பரப்பில் சாகுபடி செய்யப்படும் முக்கிய எண்ணெய் வித்து பயிர் நிலக்கடலையாகும். இறவை நிலக்கடலையில், அதிக மகசூல் பெற, நவீன தொழில் நுட்பங்களை, விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும்.
- மணற்பாங்கான வண்டல், செம்மண் மற்றும் கருவண்டல் நிலங்களில் நிலக்கடலை சாகுபடிக்கு ஏற்றவை.
- மண்ணின் தன்மைக்கு ஏற்ப நான்கு அல்லது ஐந்து முறை இரும்புக்கலப்பை அல்லது நாட்டு கலப்பை கொண்டு கட்டிகள் நன்கு உடையும் வரை உழவு செய்ய வேண்டும்.
- கடைசி உழவுக்கு முன் ஏக்கருக்கு, ஐந்து டன் தொழு உரம் இட வேண்டும். ஏக்கருக்கு சிறிய பருப்பு ரகங்களாக இருந்தால், 50 கிலோவும், பெரிய பருப்பு ரகங்களாக இருந்தால், 55 கிலோ விதை தேவைப்படும்.
- விதை கடினப்படுதுஞூதுதல் என்ற தொழில் நுட்பத்தின் மூலம் முளைக்காத விதைகள் தனியாக அப்புறப்படுத்தி விட்டு, நல்ல முறைப்பு திறனுள்ள விதைகள் மட்டும் விதைப்பதன் மூலம் செலவை குறைப்பதுடன் பயிர் எண்ணிக்கை சரியாக பராமரிக்கலாம்.
- வறட்சியை தாங்கி விதைகள் முளைத்து வளர விதைகளை கால்சியம் குளோரைடு ரசாயன கரைசலில் ஊற வைத்து கடினப்படுத்தி பின் விதைக்க வேண்டும். இம்முறையில் விதைகளை கடினப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரும், ஐந்து கிராம் கால்சியம் குளோரைடு என்ற அளவில், 28 லிட்டர் தண்ணீரில், 140 கிராம கரைத்து, கரைசல் தயார் செய்து அதில், ஒரு ஏக்கருக்கு தேவையான விதையை ஆறு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- ஊற வைத்விதைகளை ஈரச்சாக்கின் மீது பரப்பி அதை மற்றொரு ஈரச்சாக்கால், 20 முதல், 24 மணி நேரம் மூடி வைக்க வேண்டும். பின்னர் மேலே மூடியுள்ள சாக்கி நீக்கி, சிறிதளவு முறைப்பு கண்ட விதைகளை தனியாக பிரித்தெடுத்து நிழலல் உலர்த்தவும்.
- பின்னர் மீண்டும் ஈரச்சாக்கால் மூடி, இரண்டு மணி நேர இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று முறை சிறிய முளைப்பு கண்ட விதைகளை பிரித்தெடுத்து, நிழலில் உலர்த்தி பின் விதைப்பு செய்யவும்.
- இவ்வாறு விதைகளை கடினப்படுத்துவதன் மூலம் விதைகள் வறட்சியை தாங்கி வளரும், விதைகளில் தண்ணீர் ஊடுருவும் திறன் அதிகரிக்கிறது.
- இளம் பயிர்களில் பயிர் வீரியம் அதிகரிக்கும்.
- முளைக்கும் தன்மையுள்ள விதைகள் கண்டறிந்து விதைப்பதால், பயிர் எண்ணிக்கையை பராமரிக்க முடியும். விதைக்கும் முன் முதலில் விதைகளை உயிரியல் பூஞ்சானக் கொல்லியான, “டிரைக்கோடர்மா விரிடி’ என்ற பூசணம் ஒரு கிலோ விதைக்கு, நான்கு கிராம் அல்லது சூடோமோனாஸ், 10 கிராம் என்ற அளவில் விதையுடன் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
- பின்னர் விதைக்கும் முன் உயிர் உரங்களான நிலக்கடலை ரைசோபியம் மற்றும் பாஸ்போபேக்டீரியா தலா இரண்டு பொட்டலங்களை ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்து, நிழலில் உலர்த்தி பின் 24 மணி நேரத்துக்குள் விதைப்பு செய்ய வேண்டும்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்