“நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 50 சதவீதம் மானியத்தில், ஜிப்சம் வினியோகம் செய்யப்படுகிறது’ என, நாமக்கல் கபிலர்மலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் தங்கராஜூ தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
- கபிலர்மலை வட்டாரத்தில் நிலக்கடலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 50 சதவீதம் மானிய விலையில், ஜிப்சம் மற்றும் உயிர் உரங்கள் வழங்கப்படுகிறது.
- ஒரு நபருக்கு அதிக பட்சமாக, எட்டு மூட்டை அதாவது, 400 கிலோ ஜிப்சம் வழங்கப்படுகிறது.
- ஜிப்சம் மானிய விலையில் பெற, நிலத்தின் சிட்டா மற்றும் ரேஷன்கார்டு நகரை காண்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
- நிலக்கடலையில், திரட்சியான மகசூல் பெற அடியுரமாக, 200 கிலோ ஜிப்சமும், 45வதுந ாளில், 200 கிலோ ஜிப்சமும், 2.50 ஏக்கர் (ஒரு ஹெக்டேர்) பரப்பிற்கு இட வேண்டும்.
- ஜிப்சம் இடுவதால், எண்ணெய் வித்து கூடுவதுடன், காய்கள் திரட்சியாக பொக்கில்லாமல் கிடைக்கும்.
- விவசாயிகளுக்கு தேவையான ஜிப்சம் மற்றும் உயிர் உரங்கள் கபிலர்மலை வட்டாரத்தில் உள்ள கபிலர்மலை வேளாண் விரிவாக்க மையம் மற்றும் சோழசிராமணி துணை வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டு, 50 சதவீதம் மானிய விலையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
- தேவைப்படும் விவசாயிகள், அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்