நிலக்கடலை மேல் ஓடு உரிக்கும் இயந்திரம்

நிலக்கடலை தமிழ்நாட்டில் அதிகம் பயிரிட படும் ஒரு பயிர். 120-150 நாட்களில் சாகுபடி செய்யலாம். இந்த பயிரில் ஒரு பெரிய வேலை என்ன என்றால் வேரோடு எடுக்க பட்ட நிலக்கடலையில் இருந்து மேல் ஓடு பிரித்து எடுத்து கடலையை வெளியில் எடுப்பது, இந்த வேலை அதிக பேரையும் நேரத்தையும் எடுத்து கொள்ளும் ஒரு வேலை.

ஒரு ஏக்கருக்கு 20-30 வேலை ஆட்கள் தேவை. வேலைஆட்கள் பற்றாக்குறை உள்ள இந்த நாட்களில் இது ஒரு பிரச்னையாக உரு எடுத்து உள்ளது.

Courtesy: hindu
Courtesy: hindu

இந்த பிரச்னையை போக்க ஈரோடை சேர்ந்த நசியனூர் கிராம விவசாயி திரு மோகன சுந்தரம் நிலக்கடலை மேல் ஓடு பிரிக்கும் ஒரு இயந்திரத்தை கண்டு பிடித்து உள்ளார்.

  • இது 0.25hp மோட்டார் மூலம் இயங்குகிறது.
  • அளவில் சிறிதாக இருக்கும் (35கிலோ எடை) இருபதால் ஒரு இடத்தில இருந்து ஒரு இடம் எடுத்து செல்வது எளிது. (portable)
  • ஒரு நிலகடலை விவசாயி இந்த இயந்திரத்தை கொண்டு 2-3 நாட்களில் தன் குடும்ப உறுப்பினர்கள் மூலம் ஒரு ஏகர் விளைச்சலை மேல் ஓடு பிரிக்கலாம்
  • ஈரோடு KVK வேலை செய்யும்  Dr அழகேசன் கூறுகையில் “இந்த இயந்திரம் இயக்க எளிதானது. 99% ஓடுகளை சரியாக பிரிக்கிறது ” என்றார்.
  • இந்த கண்டுபிடிப்பு மோகன சுந்தரத்திற்கு இந்த வருட விருது கிடைத்து இருக்கிறது
  • ரூ 20000 விலை கொண்ட இந்த இயந்திரம் இது வரை 250 பேருக்கு விற்று இருக்கிறார்மேலும் விவரங்களுக்கு:

    Dr S அழகேசன் MYRADA க்ரிஷி விக்யான் கேந்திரா 272, பெருமாள் நகர் புது வள்ளியம்பாளயம் , களின்காயம் போஸ்ட்,
    கோபிசெட்டிபாளையம் தாலுகா ஈரோடு – 638453
    அலைபேசி: 09488020646

    நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *