தமிழநாட்டில் எல்லா நதிகளிலும் ஏரிகளிலும் அதிகமாக மணல் எடுக்கப்படுகிறது. இதனால், நிலத்தடி நீர் குறைகிறது. மழை நீர் வேகமாக கடலுக்கு பாய்ந்து விடுகிறது.
மணல் வீடு கட்ட மிக்வும் அதிகம் பயன் படுத்த படுகிறது. பொருளாதாரத்தில், கட்டுமானம் (Construction activities) பெரிய செயல்பாடு. இதனால் பல பேருக்கு வேலை வாய்ப்பு. ஆகையால் அரசாங்கங்கள் மணல் தோண்டி எடுப்பதை குறைக்க ஈடுபாடு இல்லை.
இதை தவிர யார் வேண்டுமானாலும் ஒரு மூலம் மண் கொள்ளை எடுத்து விற்பது வாடிக்கை ஆகிவிட்டது.
நம் ஊர் நிலைமை இப்படி இருக்க, பீகாரில் கங்கை ஆறு அளவுக்கு அதிகமாக மணலை டெபாசிட் செய்து வருகிறது. இதனால அவர்களுக்கு வேறு மாதிரியான பிரச்னை.
மணல் டெபாசிட் ஆவதால் ஆற்றின் ஆழம் குறைகிறது. மழை காலத்தில் கங்கை நீர் எல்லா ஊர்களிலும் உள்ளே வந்து வெள்ள காடாகிறது.. பீகாரில் 11 இடங்களில் ஆறே திசை மாறி உள்ளது..
ஏன் பீஹார் அரசு இந்த மணலை எடுத்து மற்ற மாநிலங்களுக்கு விற்க கூடாது? இப்படி செய்தால் அவர்களின் வெள்ள பிரச்னையும் குறையும். நம் ஊரின் மணல் கொள்ளையும் குறையும்.. நம் ஊர் அரசியல்வாதிகளுக்கு மணல் எடுப்பது என்பது எளிதான ஒரு தொழில்.. என்ன செய்ய?
நன்றி:Thirdpole.net
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்