அபார்ட்மெண்ட்களில் எளிய முறையில் நீர் மறுசுழற்சி !

ஒரு பக்கம் நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. இன்னொரு பக்கம் சாக்கடை நீரை என்ன செய்வது என்று தெரியாமல் ரோடு முழுவதும் ஓடி சுகாதார கேடாகி வருகிறது. நகரங்களில், அபார்ட்மெண்ட்கள் அதிகம் இருக்கும் இடங்களில் இந்த சாக்கடை பிரச்னை அதிகம்.

அனால் நமக்கு இந்த சாக்கடை நீரை நாமே சுத்தப்படுத்தி நிலத்தடி நீரை அதிகரிக்கும் தொழிற்நுட்பம் எளிதாக நம் ஊரிலிலேயே இருப்பது நமக்கு தெரியாது.

சமையல் அறை, குளிக்கும் இடங்கள், வாஷிங் மெஷின் மூலம் நீர். லெட்ரின் நீர் இதில் சேர்க்க கூடாது. இந்த நீரை Grey Waterஎன்று அழைக்கின்றனர். இது

சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள 8 அபார்ட்மெண்ட்களை கொண்ட பிளாட் இது. இங்கே இப்படி கட்டும் போதே குழாய்களை அமைத்து விட்டனர். இந்துகந் ராகடே எனும் நுட்பம் அறிந்தவர் இதற்க்கு உதவி உள்ளார்.

இப்படி எல்லா வீடுகளில் இருந்து வரும் நீர், நீரை விரும்பும் செடிகளுக்கு விட படுகிறது. கல் வாழை (Canna Indica) , செப்பமகிழங்கு போன்ற செடிகளை பாத்தி கட்டி நீரை விடுகின்றனர். கீழே இருந்து வடிகட்டிய நீர் வருகிறது. இந்த செடிகள் நீரில் உள்ள அசுத்தம், சோப்பு, போன்றவற்றை உறுஞ்சி எடுத்து விடுகிறது.

இப்படி வெளியே வரும் வடிகட்டிய நீரை செடிகளுக்கு விடலாம். அல்லது ஒரு கிணற்றில் விட்டால் நிலத்தடி நீர் உயரும். இந்த முறையில் எந்த நாற்றமும் வராது என்கிறார் இந்துகந்.இந்த முறையில் எந்த செலவும் கிடையாது!

வீட்டில் செலவாகும் நீரில் 65% இப்படி பட்ட Grey நீர் தான். இதை மறுசுழற்சி செய்வதால், நீர் உறுஞ்சலும் வெளியில் இருந்து நீர் வாங்குவதும் குறைகிறது என்கிறார்கள் இந்த வீட்டில் வாழ்பவர்கள்

இப்படி 65% நீர் உள்ளேயே சுழற்சி செய்து வெளியில் போவது தடுக்கப்படுவதால் சாக்கடையும் குறைகிறது!

ஆகவே நீங்கள் உங்கள் அபார்ட்மெண்ட் வாங்கும் நிலையில் இருந்தால் கட்டும் போதே இந்த சிறிய மாற்றத்தை செய்து கொடுக்க சொல்லுங்கள். முடியாவிட்டால் குழாய்களை வெளியில் மாற்றி அமைக்க சொல்லுங்கள். உங்கள் நீர் செலவு குறையும்! சாக்கடை பிரச்சனையும் மறையும்!

நன்றி: இந்தியா வாட்டர் போர்டல்

Courtesy: Hindu

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *