அபூர்வ ஆமைக்குஞ்சுகள் கடலில் விடும் பணி தீவிரம்

வேதாரண்யம்: அழியும் நிலையில் உள்ள அபூர்வ இன, ‘ஆலிவ்ரெட்லி’ ஆமைக்குஞ்சுகளை, கோடியக்கரை கடலில், வனத்துறையினர் பாதுகாப்பாக விடத்துவங்கி உள்ளனர்.

Tamil_News_large_93117420140312003824

  • நாகை மாவட்டம், கோடியக்கரையில், வனத்துறை சார்பில், ஆமைக்குஞ்சு பொரிப்பகம் இயங்கி வருகிறது.
  • ஜனவரி முதல் மார்ச் வரை, ஆழ்கடல் பகுதியில் இருந்து, நாகை மாவட்ட கடற்கரை பகுதிக்கு வரும், ஆலிவ்ரெட்லி ஆமைகள், முட்டை இடுகின்றன.
  • இவற்றை, இந்த மையம் சேமித்து பாதுகாக்கிறது. இந்த ஆண்டு, இதுவரை, 8,000 ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
  • இவை, 45 முதல் 55 நாட்களுக்குள் குஞ்சாக பொரித்ததும், கடலுக்குள் பாதுகாப்பாக விட்டு, இனவிருத்தி செய்யப்படுகின்றன.
  • பொரிப்பகத்தில் இருந்து, 250 ஆமைக்குஞ்சுகளை, கோடியக்கரை கடலில், நேற்று காலை, 9:30 மணிக்கு, வனத்துறையினர் விட்டனர்.
  • வனத்துறையினர் கூறுகையில், ‘கோடியக்கரையில் ஆமைக்குஞ்சு பொரிப்பகம் மூலம், இதுவரை, 1,000 ஆமைக்குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன. மீதமுள்ள, 7,000 முட்டைகளில் குஞ்சு பொரித்தவுடன், கடலில் பத்திரமாக விடப்படும்’ என்றனர்.

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *