உலக சதுப்பு நில தினம் (World Wetlands Day) என்பது சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தினை மக்கள் அறிந்து கொள்ள கொண்டாடப்படும் தினமாகும்.. இந்த நாள் பிப்ரவரி 2 ஆம் தேதியாகும்.
உவர்நீர் நிறைந்த கடலுக்கும், நிலங்களுக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி இருக்கும் பகுதியே சதுப்பு நிலங்களாகும்.இவை சுற்றுச் சுழலுக்கு பெரிதும் துணை நிற்கின்றன.புலம் பெயர் பறவைகள் பலவற்றிக்கு இவையே புகழிடங்கள்.
பூமியின் மொத்தப் பரப்பில் 6 சதவீத பகுதி சதுப்பு நிலங்களாக உள்ளன. இவை பெரும்பாலும் இயற்கையாக உருவானவை, மனிதனால் உருவாக்கப்பட்டவை என இரண்டு பிரிவாக வகைப்படுத்தப்படுகின்றது.
கடலோரம் உள்ள அலையாத்திக் காடுகள், குட்டைகள் உள்ளிட்டவை இயற்கையாக உருவானவை என்றும், ஏரிகள், குளங்கள், நீர்தேங்கும் குவாரிப்பள்ளங்கள் ஆகியவை மனிதனால் உருவாக்கப்பட்டவை என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.
1971-ல் காசுபியன் கடற்பகுதியிலுள்ள ஈரான் நாட்டின் ராம்சர் நகரில் 18 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் சதுப்பு நிலங்களையும், நீர்நிலைகளையும் பாதுகாப்பது குறித்து ஒரு மனதாக முடிவு செய்த தினம்தான் பிப்ரவரி 2 ம்தேதி ஆகவே இந்த நாள் உலக சதுப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.இக்கூட்டம் ராம்சர் நகரில் நடைபெற்றதால் இந்த அமைப்புக்கு ராம்சர் அமைப்பு எனவும் ஒரு பெயர் உண்டு.
தற்போது ராம்சர் அமைப்பில், இந்தியா உட்பட 161 நாடுகள் உள்ளன. உலகின் சுற்றுசூழல் முக்கியத்துவம் வாய்ந்த 1,950 சதுப்புநிலங்கள் பட்டியலிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது, இந்தியாவில் மட்டும் 25 சதுப்புநிலங்கள் தகுதிவாய்ந்தவையாகும், அதில் தமிழகத்தில் கோடியக்கரை, பழவேற்காடு போன்றவை அடங்கும்.
கொண்டாட்டம் என்றால் இந்த சதுப்பு நிலத்தில் இறங்கி ஆட்டம் போடுவதல்ல, சதுப்பு நிலத்தினை பாதுகாப்பதும் இதன் முக்கியத்துவத்தை வரும் தலைமுறைக்கு எடுத்துரைப்பதுமாகும்.அதைச் செய்வோமா?
-எல்.முருகராஜ்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
இயற்கை எப்போதும் அழகு. அருமையான பதிவு!