விஜய் மற்றும் அசோக் பெட்ரே சகோதரர்கள் வரட்சியான பகுதியில் நெல்லிக்காய் சாகுபடி செய்து சாதனை செய்துள்ளார்கள்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மல்நாடு பகுதியை சேர்ந்த இவர்கள் இருக்கும் இடத்தில பாக்கு தோட்டங்களே அதிகம். இவர்கள் சேலத்திற்கு வந்த போது நெல்லிக்காய் சாகுபடி பற்றி தெரிந்து கொண்டனர்.
இப்போது 30 ஹெக்டர் நிலத்தில் சாகுபடி செய்கின்றனர். ஜீரோ பட்ஜெட் விவசாயம் படி விவசாயம் செய்கின்றனர். ஜீவம்ருத செய்ய நாட்டு பசுக்களின் சாணி, வெல்லம் பயன் படுத்துகின்றனர்.
நெல்லிக்காயக்கு ஆயுர்வேத மருந்து தயாரிப்பவர்கள், ஷாம்பூ உற்பத்தியாளர்கள், எண்ணெய் உற்பத்தியாளர்கள் போன்றவர்கள் நேரடியாக வந்து வாங்கி செல்கின்றனர்.
இவர்கள் இந்த வருடம் 30 லட்சம் வருமானம் கிடைக்கும் என்கின்றனர்!
ஊடு பயிராக துளசி, இஞ்சி போன்றவற்றையும் பயிர் இடுகிறார்கள். நெல்லி வறட்சி உள்ள இடங்களில் நன்றாக வருகிறது. இதற்கு பூச்சி தொல்லையும் குறைவு. நீர் தேவையும் குறைவு என்கிறார்.
முழு விவரங்களுக்கு: ஹிந்து (ஆங்கிலத்தில்)
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
super
I have 25 trees at my farm and all are fully grown but no yield till now. Any advise?