இலை வண்ண அட்டை

யூரியா தட்டுப்பாட்டை குறைக்க, விவசாயிகள், இலை வண்ண அட்டையை பயன்படுத்தும்படி, வேளாண் துறை அறிவுறுத்தி உள்ளது.மீஞ்சூர் ஒன்றியத்தில், 26,500 ஏக்கர் பரப்பளவில், சம்பா சாகுபடிக்காக நெல் பயிரிடப்பட்டு உள்ளது. தற்போது, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

Courtesy: TNAU
Courtesy: TNAU

இலை வண்ண அட்டை

  • இலை வண்ண அட்டை என்பது, தமிழ்நாடு வேளாண் துறையால், விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் கையடக்க அட்டையாகும். அதில், 2, 3, 4, 5 என்ற எண்களுடன், நான்கு வகை பச்சை நிறம் பதிக்கப்பட்டிருக்கும்.
  • அதில், எண் 4 மற்றும் 5 உடன் ஒப்பீடு சரியாக இருந்தால், யூரியா இட தேவையில்லை என்றும், எண் 3 உடன் ஒப்பீடு ஆனால், பொன்னி ரக நெல்லுக்கு மட்டும், எண் 2 உடன் ஒப்பீடு ஆனால், ஏக்கருக்கு 12 கிலோ தழைச்சத்து, 25 கிலோ யூரியா இட வேண்டும் என, வேளாண் துறையினர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

ஒப்பீடு செய்வது எப்படி?

  • பயிர் எண்ணிக்கை சரியாக உள்ள பகுதியில், நோய் மற்றும் பூச்சி தாக்காத குருத்துகளை இங்கொன்றும், அங்கொன்றுமாக 10 இடங்களில் நெற்பயிர்களில் உள்ள இலையை தேர்வு செய்ய வேண் டும். அதில் இளமையான முழுவதும் விரிந்த ஏதாவது ஒரு இலையின் நிறத்தையுடைய இலையை பறிக்காமல், அட்டையில் உள்ள வண்ண பட்டைகளின் மையப்பகுதியில் வைத்து, நிறத்தை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
  • நேரடி நெல் விதைப்புக்கு, 21 நாட்களுக்கு பிறகும், கடைசியாக பயிர் பூக்க துவங்கும்போதும் அளவு எடுத்து, இலை வண்ண அட்டையை பயன்படுத்த வேண்டும்.
  • சம்பா பருவத்திற்கு, 10 நாட்களுக்கு ஒரு முறை அளவுகள் எடுக்க வேண்டும்.
  • ஒவ்வொரு முறையும், காலை அல்லது மாலையில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் (கூடுமான வரை ஒரே நபர்) சூரியன் பின்னால் இருக்கும்படி, அளவு எடுக்கப்படும் இலையை மறைத்தவாறு அளவீடு செய்ய வேண்டும்.

அதிக யூரியாவால்

இதுகுறித்து, மீஞ்சூர் ஒன்றிய வேளாண் துறை உதவி இயக்குநர் ரேவதி கூறுகையில், ”இலை சுருட்டு புழு மற்றும் குருத்து பூச்சி வருவதை தவிர்க்க, யூரியா பயன்பாட்டை குறைக்க வேண்டும். அதற்கு விவசாயிகள் இலை வண்ண அட்டையை பயன்படுத்த வேண்டும். விவசாயிகள் இலை வண்ண அட்டையை வேளாண் துறை அலுவலகத்தில் இலவசமாக பெற்று கொள்ளலாம்,” என்றார்.

மேலும், ”இலை வண்ண அட்டையை பயன்படுத்துவதில் சந்தேகம் இருந்தால், வேளாண் துறை அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம். பூச்சி தாக்குதலை தவிர்ப்பதுடன், யூரியா தட்டுப்பாட்டையும் குறைக்க முடியும்,” என்றார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *