உரச்செலவை குறைக்க நெல் சாகுபடியில் பசுந்தாள் உரம்

தமிழ்நாட்டில் ஒருபோக சம்பா நெல் சாகுபடி அதிக பரப்பளவில் செய்யப்டடுகிறது.  இப்பருவத்தில் மத்திய மற்றும் நீண்ட கால நெல் ரகங்கள் பயிரிடப்படுகின்றன.

மண் பரிசோதனை அடிப்படையில் பயிருக்கு உரமிடல் நன்று.  மண் பரிசோதனை செய்ய இயலாத  நிலையில் மத்திய மற்றும் நீண்டகால ரகங்களுக்கு எக்டேருக்கு 150கிலோ தழைச்சத்து 50 கிலோ மணிச் சத்து மற்றும் 25 கிலோ சாம்பல் சத்து மற்றும் 25 கிலோ சாம்பல் சத்து மற்றும்க் 25 கிலோ துத்தநாக சல்பேட்டும் பரிந்துரைக்கப்படுகிறது.

ஆனால் சில மத்திய கால நெல் வகைகளுக்கு  அதிக அளவில் தழைச்சத்து இட்டால் அவை அதிகம் வளர்ந்து பூக்கும் பருவத்திலோ அல்லது பால் பிடிக்கும் பருவத்திலோ சாய்ந்துவிடுவதால் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே நெல் ரகங்களின் தன்மையை அறிந்து தழைச்சத்தினை இடுதல் மிகவும் அவசியமாகும்.

இயற்கை உரங்கள்:

இயற்கை உரங்களை இடுவதால் நெல்லில் நல்ல பயனை அடையலாம்.  பண்ணை மரங்களான புங்கம், கிளிரிசிடியா, வேம்பு போன்ற -வற்றில் நல்ல தழை உரம் கிடைத்தாலும், அவற்றை வெட்டி எடுத்துச்சென்று வயலில் இடுவதற்கு அதிக ஆட்கள் தேவைப்படுகிறது.

ஆகவே கோடை கால மற்றும் தென்மேற்குப்பருவக்காற்று காலத்தில் கிடைக்கும்.  மழையைக் கொண்டும், கிணற்றுப்பாசன வசதியுள்ள இடங்களிலும் பசுந்தாள் பயிரைப் பயிரிட்டு அவற்றை  அதே நிலத்தில் மடக்கி உழுது நெல் பயிரிடலாம்.  30 முதல் 45 நாட்களில் நன்கு வளர்ந்து அதிக தழைச்சத்தினை கொடுக்கவல்ல பசுந்தாள் பயிர்களைத்தேர்வு செய்து பயிரிடவேண்டும்.

இதனால் நெல்லிற்கு இடவேண்டிய தழைச்சத்தின் அளவைக் கணிசமாகக் குறைப்பதுடன் மண் வளத்தை நீண்ட காலத்திற்கு காப்பதற்கு ஏதுவாகிறது.  தக்கைப்பூண்டு, மணிலா அகத்தி மற்றும் கொளஞ்சி முதலான பசுந்தாள் பயிர்களைத் தேர்வு செய்து பயிரிடவேண்டும்.  இதனால் நெல்லிற்கு இடவேண்டிய தழைச்சத்தின் அளவைக் கணிசமாகக் குறைப்பதுடன் மண் வளத்தை நீண்ட காலத்திற்கு காப்பதற்கு ஏதுவாகிறது.  தக்கைப்பூண்டு , மணிலா அகத்தி மற்றும் கொளுஞ்சி முதலான பசுந்தாள் உரப்பயிர்கள்  சம்பா பருவ நெல்லிற்கு ஏற்றவை.

தக்கைப்பூண்டு:

இது மிகவும் வேகமாக வளர்ந்து 50-60 நாட்களில் எக்டேருக்கு 40 டன் வரை பசுந்தாள் உரத்தினை கொடுக்கும் தன்மையுடயது.  தண்ணீர் தேக்கத்தையும் வறட்சியையும் ஓரளவு தாங்கி வளரக்கூடியது.  எக்டேருக்கு 30-35 கிலோ விதை தேவைப்படும் களர், உவர் நிலங்களுக்கு ஏற்ற ஒரு முக்கிய பசுந்தாள் உரம் ஆகும்.

மணிலா அகத்தி:

செஸ்பேனியா ரோஸ்ட்ரேட்டா எனப்படும் மணிலா அகத்தி வேர் முடிச்சுகளுடன் தண்டு பாகத்திலும் முடிச்சுகளைக்கொண்டுள்ளது.  அதிக தழைச்சத்தினை சேமிக்க வல்லது.  நீர்த்தேக்கமுள்ள  நெல் பயிரிடும் நன்செய் நிலங்களில் நன்றாக வளர்ந்து மக்கிய பிறகு விரைவாக நெல்லிற்கு தழைச்சத்தினை தரும் தன்மையுடையது. கோடைப்பருவத்தில் இதன் வளர்ச்சி அதிகம்.  60 நாட்களில் 30-40 டன்  பசுந்தாள் உரத்தினைக்கொடுக்கவல்லது.

கொளுஞ்சி:

மணற்பாங்கான நிலங்களில் இதன் வளர்ச்சி நன்கு காணப்படுகிறது.  வறட்சியைத் தாங்கும் தன்மையுடையது.  ஒருமுறை விதைத்தால் வளர்ந்த  பயிரிலிருந்து சிதறும் விதைகள் அடுத்தடுத்த பருவங்களில், இந்த பயிர் தொடர்ந்து முளைக்கும் திறன் பெற்றது.  மாடு மேயாததால் இதனைக் கோடைப்பருவத்தில் வயலில் வளர்ப்பது எளிது.  இதன் வளர்ச்சி வேகம் குறைவாக இருப்பினும் நீண்ட நாட்களுக்கு (100 நாட்கள் வரை) பசுமையாக இருந்து அதிக தழைச்சத்தினை தரும் இயல்புடையது.

பசுந்தாள் உரமிடும் முறை:

பசுந்தாள் உரப்பயிர்கள் நீண்ட நாட்களுக்கு (60 நாட்கள்) வளர்ந்தால் அதிக விளைச்சல் கிடைக்கும்.  ஆனால் தண்ணீர் தேவையும் அதிகரிக்கிறது. மேலும் நீண்ட நாட்கள் வளர்ந்த பசுந்தாள் உரம் நார்த்தன்மை பெற்று மக்கும் தன்மை குறைகிறது.  அதிகம் வளர்ந்த பயிரை ஒரு வயலில் இருந்து இன்னொரு வயலுக்கு எடுத்துச் சென்று வயலில் இட அதிக ஆட்கள் தேவைப்படுவதால் சிரமம் அதிகமாகிறது. மேலும் நன்கு வளர்ந்த அதிகப்படியான பசுந்தாள் உரப்பயிர்களை சேற்றில் மடக்குவது சிரமமாகும்.

தக்கைப்பூண்டு மற்றும் மணிலா அகத்தி முதலியன குறைந்த  நாட்களில் நல்ல தழை உரத்தினைக் கொடுக்கவல்லன.  மழை, கிணறு மற்றும் கால்வாய் பாசனம் குறைந்த 30-35 நாட்களில் எக்டேருக்கு 7 முதல் 8 டன் தழை உரத்தினை எளிதாகப் பெற முடியும்.  கொளுஞ்சி வறட்சியைத்தாங்கி வளர்ந்து நீண்ட நாட்களுக்கு பசுமையாக இருப்பதால் குறைவான நீர்ப்பாசன மூலம் வசதி மற்றும் குறைந்த பகுதியில் கோடையில் பயிரிட்டு சம்பா நெல்லிற்குப் பயன்படுத்தாலாம்.  பசுந்தாள் உரப்பயிர்களை சேற்றில் மடக்கி 5 முதல் 7 நாட்கள் கழித்து நெல் நடவு செய்ய வேண்டும்.  நெல்லிற்கு எக்டேருக்கு 6.25 டன் பசுந்தாள் உரத்தின் அளவை எக்டேருக்கு 6.25 டன்  பசுந்தாள் உரம் பரிந்துரைக்கப்படுகிறது.  எனவே பசுந்தாள் உரத்தின் அளவை எக்டேருக்கு 10 முதல் 12 டன் வரை அதிகரித்தால் ரசாயன தழைச்சத்து உரச் செலவை 30 முதல்  50 சதம் வரை சேமிக்கலாம்.

தகவல்: லட்சுமிநாராயணன், ஆலோசகர், MSSRF, திருவையாறு.

நன்றி: MS சுவாமிநாதன் வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *