வேதாரண்யம் வட்டாரத்தில் சம்பா பயிரில் ஏற்பட்டுள்ள இலைகருகல் நோயை சரிசெய்ய, வேதாரண்யம் வட்டார விவசாய உதவி இயக்குனர் மணிகண்டன் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
- மாறுப்பட்ட தட்பவெப்ப நிலை காரணமாகவும், மழைக்காற்றின் சீற்றத்தாலும், வேதாரண்யம் வட்டாரத்தில், நெற்பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் நோய் ஏற்பட்டுள்ளது.
- சம்பா நெற்பயிரின் இலைகளில் இருஓரங்களிலும் மஞ்சள் கலந்த பழுப்பு நிற திட்டுக்கள் தோன்றி, கருகியதைபோன்ற தோற்றத்துடன் காணப்படும்.
- இதைக்கட்டுப்படுத்த விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
- தழைச்சத்து உரங்களை பரிந்துரைக்கப்பட்ட அளவில், ஏக்கருக்கு 110 கிலோ வீதம் இடவேண்டும்.
- நோய் எதிர்ப்பு தன்மையுள்ள நெல் ரகங்களான, ஐ.ஆர்.,- 20, பி.கே.எம்.,- 6 போன்ற ரகங்களை சாகுபடி செய்யலாம்.
- சூடோமோனஸ் புளூராசன்ஸ் என்ற பாக்டீரியா உயிர்க்கொல்லி மருந்தினை ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம் நன்கு மக்கிய தொழுஉரம் 20 கிலோ அல்லது ஆற்றுமணல் 20 கிலோவுடன் சேர்த்து தூவவேண்டும்.
- இலைவழி தெளிப்பாக சூடோமோனஸ் பாக்டீரியா உயிர்க்கொல்லி மருந்தினை ஏக்கருக்கு 400 கிராம் அளவில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கலாம்.
- இலைவழி தெளிப்பாக காப்பர் ஆக்ஸிக் குளோரைடு 500 கிராமுடன், 120 கிராம் புரோ இஸ்ட்ரேப்டோசைக்கிளின் கலந்து ஏக்கருக்கு 200 லிட்டர் கரைசலை கை தெளிப்பான் கொண்டு தெளிக்கலாம்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்