செலவில்லாத பாரம்பரிய நெல் ரகம் சிங்கினிகார்

மழை, நீர் தேங்குவது போன்ற இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி வளரும் வல்லமை கொண்டது சிங்கினிகார் நெல் ரகம். நடுத்தர ரகமாகவும் சிவப்பு நெல், சிவப்பு அரிசியையும் கொண்டது. களை அதிகமாக உள்ள நிலத்திலும் சாகுபடி செய்ய ஏற்றது.

செலவில்லாத ரகம்

Courtesy: Hindu
Courtesy: Hindu

இந்த நெல் ரகம் இயற்கையாகவே நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டது. இந்த நெல் சாகுபடியில் அறுவடைக்குப் பின் வைக்கோலின் பெரும்பகுதி அழுகி நிலத்தில் மக்குவதால் மண்ணின் சத்து கூடுகிறது. இந்தச் சத்தையே உணவாக எடுத்துக்கொண்டு வளரும் தன்மை இயற்கையாகவே இந்த ரகத்துக்கு உண்டு.

நிலத்தில் மக்கும் பொருட்களால் மண்ணில் உண்டாகும் நுண்ணுயிர்களைச் சத்துகளாக எடுத்துக்கொண்டு, இடுபொருள் செலவு தேவைப்படாமல் சாகுபடி செய்யக்கூடிய நெல் ரகம் சிங்கினிகார். அந்த வகையில் இது செலவில்லாத நெல் ரகமும்கூட.

நோய் எதிர்ப்பு

அது மட்டுமல்லாமல் உணவுக்கும், பலகார வகைகளுக்கும் ஏற்றது. இந்த அரிசியின் சிறப்பு அவல், பொரிக்கு ஏற்ற ரகம்.

நோய் எதிர்ப்புச் சக்தியும் மிகுந்தது. தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம். நோயாளிகள் கஞ்சி வைத்துக் குடிப்பதன் மூலம், மிகுந்த பலத்தையும் உடல் நலத்தையும் பெறுவார்கள்.

நெல் ஜெயராமன் தொடர்புக்கு: 094433 20954


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *