திருந்திய நெல் சாகுபடி முறை

குறைவான தண்ணீ ரில், அதிக விளைச்சலை அள்ளும் நெல் சாகுபடி முறைகள் குறித்து கூறும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மண் மற்றும் நீர் ஆராய்ச்சி மைய தலைவர், முனைவர் வெ.ரவி:

 • திருந்திய நெல் சாகுபடி முறை மூலமாக, குறைந்த அளவு நீர் மற்றும் குறைந்த அளவு நாற்றுகளைப் பயன்படுத்தி, அதிக அளவிலான மகசூல் பெறலாம்.
 • இந்த முறையில் ஒவ்வொரு நாற்றுக் கும், 25க்கு 25 செ.மீ., இடைவெளி இருக்கு மாறு, 15 நாட்கள் வளர்ச்சி அடைந்த நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.
 • மேலும், அதிக அளவு நாற்றுகளைப் பயன்படுத்தாமல், ஒற்றை நாற்றை நடவு செய்தால் போதுமானது.இதற்கு, நிலம் சமமானதாக இருக்க வேண்டும். இதனால், களை அதிகம் மண்டாது.
 • இந்த முறையில் ஒரு ஏக்கருக்கு, இரண்டு கிலோ விதை போதுமானது.
 • அதேபோல், நாற்றங்கால் பரப்பும் குறைவு என்பதால், விதைச் செலவு, நாற்று பறிக்கும் செலவு குறையும்.
 • மேலும், நடவில் நாற்றுகளுக்கிடையே அதிக இடைவெளி இருப்பதால் அதிக துார்கள் வெடித்து, அதிக மகசூல் கிடைக்கிறது.
 • நீர் அதிகம் கிடைக்காத கடைமடைப் பகுதிகளுக்கு ஏற்றது, புழுதி மண்ணில் நேரடி நெல் விதைப்பு முறை; நன்கு புழுதியடையும்படி நிலத்தை உழவு செய்து, பின் விதைப்பானைக் கொண்டு நெல்லை விதைக்க வேண்டும்.
 • இவ்வாறு விதைப்பதற்கு, ஏக்கருக்கு, 10 முதல் 15 கிலோ விதை நெல் போதும்.
 • தண்ணீர் விடும்போது, நெல்லுடன் களைச் செடிகளும் அதிக அளவில் முளைக்கும் வாய்ப்புள்ளதால், சரியான முறையில் களை கட்டுப்பாடு செய்ய வேண்டும்.
 • இந்த முறையில் விதைக்கும் போது, விதைச் செலவு, நாற்றங்கால் செலவு, நடவுச் செலவு, தண்ணீர் செலவு அனைத்தும் குறைகிறது;
 • நடவுக்கு இணையாக மகசூலும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
 • சேற்றில் நேரடி நெல் விதைப்பு மூலம், ஓரளவு தண்ணீர் வசதியுள்ளவர்கள், நாற்றங்கால் பதத்திற்கு வயலை உழுது, விதைப்பான் மூலம் நேரடியாக விதைத்து விடலாம்.
 • இந்த முறையிலும், களைச்செடிகள் அதிகம் உண்டு. மற்ற நடவு முறைகளுக்கு இணையாக, மகசூல் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.
 • வேளாண் பொறியியல் துறை மூலம், குறைந்த வாடகைக்கு, புழுதி மண்ணில் விதைக்கும் இயந்திரம், சேற்றில் விதைக்கும் விதைப் பான், லேசர் நிலம் சமன்படுத்தும் இயந்திரங்கள் கிடைக்கின்றன

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *