- குத்தாலம் வட்டாரத்தில் தற்போது நிலத்தடி நீரைக் கொண்டு குறுவை நடவு பணிகள் நடைபெற்று வருகின்றன.
- இந்நிலையில், அடியுரமாக தழைச்சத்து, மணிச்சத்து, சம்பல்சத்து ஆகிய பேரூட்ட சத்துக்கள் இடுவதோடு, நெல் பயிருக்கு மிகவும் முக்கியமாக தேவைப்படும் நுண்ணூட்டச் சத்தான துத்தநாகச் சத்தையும் இடவேண்டும்.
- துத்தநாக சத்து பற்றாக்குறை ஏற்பட்டால், நெற்பயிர் வளர்ச்சி குன்றி கட்டையாகவும், சமமற்ற உயரமுள்ள பயிராகவும், தூர் எண்ணிக்கை குறைந்தும் காணப்படும்.
- அடி இலைகளின் நரம்பு பகுதிக்கு இடைப்பட்ட பகுதி வெளுத்து காணப்படும்.
- இலைகளில் பழுப்பு நிறப்புள்ளிகளும், கோடுகளும் ஏற்பட்டு, இலையின் அளவு சுருங்கிவிடும்.
- பயிரை பார்ப்பதற்கு துருப்பிடித்தது போல தெரியும்.
- முடிவில் இலைகள் காய்ந்து பயிர் வளர்ச்சி நின்றுவிடும். இதனால், மகசூல் பாதிப்பு ஏற்படும்.
- எனவே, துத்தநாக சத்து பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க நடவு வயலில் ஏக்கருக்கு 10 கிலோ நன்கு பொடி செய்யப்பட்ட சிங்சல்பேட் உரத்தை 20 கிலோ மணலுடன் கலந்து நடவுக்கு முன்பாக மேலாக தூவி நடவு செய்ய வேண்டும்.
- இந்த உரத்தை மண்ணில் இட்டபிறகு உழவு செய்யக் கூடாது.
- விவசாயிகளுக்கு சிங்சல்பேட் உரம் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 50 சதவீத மானியத்தில் குத்தாலம், பாலையூர், கோமல், மங்கநல்லூர் ஆகிய வேளாண்மை விரிவாக்க மையங்களில் வழங்கப்படுகிறது.
- இதன்மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலர் அல்லது வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்