நெற்பயிரில் துத்தநாக சத்து பற்றாக்குறை

நெற்பயிரில் துத்தநாக சத்து பற்றாக்குறையை போக்க மண் பரிசோதனை அவசியம் என கிருஷ்ணகிரி மற்றும் காவேரிப்பட்டணம் வேளாண்மை உதவி இயக்குநர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

  • நெற்பயிரில் துத்தநாக சத்தின் அளவு குறைவதால் இரண்டாவது போகம் (நவரை) பருவத்தில் பயிரிடப்படும் நெற்பயிருக்கு தேவையான அளவு துத்தநாக சத்து கிடைப்பதில்லை.
  • துத்தநாக சத்து குறைபாட்டால், நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அடிபாகத்தில் உள்ள இலைகள் நுனியிலிருந்து வெளிறிய மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
  • நுனி பகுதியில் உள்ள இலைகள் பழுப்பு நிறப்புள்ளிகளுடன் காணப்படும். மேலும் பயிரின் வளர்ச்சி குன்றி காணப்படும்.
  • இதனால் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு தூர்களின் எண்ணிக்கை குறைந்து மகசூல் குறைவு ஏற்படும்.எனவே, துத்தநாக சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மண் பரிசோதனை சிபாரிசு படி உர நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். நடவு வயலில் நன்கு சனம் செய்த நடவிற்கு முன் ஏக்கருக்கு 10 கிலோ துத்தநாக சல்பேட்டுடன் 20 கிலோ மணல் கலந்து சீராக நடவு வயலில் தூவ வேண்டும்.
  • நடவு செய்யப்பட்ட நிலத்தில் துத்தநாக சல்பேட் பற்றாகுறை தென்பட்டால் 0.5 சதவீதம் (லிட்டருக்கு 5 கிராம் துத்தநாக சல்பேட்) கரைசல் நடவு செய்த 10 மற்றும் 25 நாட்களில் மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.

நன்றி: தினகரன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *