பிசான பருவத்தில் ஆடுதுறை 39 நெல் சாகுபடி செய்துள்ள பயிர்களில் புகையான் தாக்குதல் பொருளாதார சேத நிலைக்கு மேல் தென்படுகிறது.
காரணங்கள்
விவசாயிகள் தொடர்ந்து செயற்கை பைரித்திராய்டு மருந்துகளை சைபர் மெத்ரின், டெல்டாமெத்ரின் மருந்துகளை அதிகம் தெளித்தாலும், பயிரை நெருங்கி நடுவதாலும், தழைச்சத்து யூரியா அதிகம் இடுவதாலும், அடியுரமாக பொட்டாஷ் இட்டதாலும் புகையான் மற்றும் பச்சை சத்து பூச்சிகள் அதிகம் பெருகி சேதம் ஏற்படுத்துகிறது.
அறிகுறிகள்
- புகையான் பூச்சிகள் இளம்பழுப்பு நிறம் உடையவை.சாம்பல் நிறத்துடனும் காணப்படும்.
- நெல் பயிரின் அடிப்பாகத்தில் புகையான் குஞ்சுகளும், பூச்சுகளும் இருந்து கொண்டு அவற்றை உறிஞ்சுவதால் பயிர் வலுவிழந்து சாயந்துவிடும்.
- பயிர் முதலில் மஞ்சள் நிறமாகி பின் பழுப்பு நிறமாகி புகைந்தது போல் தோற்றமளிக்கும்.
- தாக்குதல் அதிகமானால் நெல் மணிகளில் பால் பிடிக்காது. கதிர்கள் சாவியாகிவிடும்.
- பயிர்கள் திட்டு திட்டாக காய்ந்து காணப்படும். தாக்கப்பட்ட பயிரின் அடிப்பகுதி பஞ்சு போல் மாறி இறுதியில் அழுகிவிடும்.
- புகையான் தாக்குதல் பகுதிகளில் நெல் பயிருக்கு மீத்தைல் பாரத்தியான், குனைல் பாஸ், குளோரிபைரிப்பாஸ், டெல்டா மெத்ரின் மற்றும் சைபர் மெத்ரின் மருந்துகளை தெளிக்க கூடாது.
- இவைகளை தெளித்தால் புகையான் மீண்டும் அதிகளவில் உற்பத்தியாகி பெரும் சேதத்தை ஏற்படுத்தும்.
கட்டு படுத்தும் முறைகள்
- புகையான் தாக்கிய வயல்களில் நீரை வடித்துவிட்டு கைத்தெளிப்பான் மூலம் ஏக்கருக்கு 12 டேங்க் வீதம் பயிரின் அடிப்பாகம் நன்கு நனையும்படி இம்மிடா குளோரிபிரிட் ஏக்கருக்கு 60 மில்லி அல்லது தயோ மெத்தாக்ஸம் ஏக்கருக்கு 50 கிராம் ஒன்றுடன் 100 மில்லி ஒட்டும் திரவம் சேர்த்து தெளிக்க வேண்டும்
இவ்வாறு நெற்பயிரில் புகையான் பூச்சியை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி கடையம் வேளாண்மை உதவி இயக்குனர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.
நன்றி: தினமலர
நெற்பயிரை பற்றிய மற்ற செய்திகளை இங்கே படிக்கலாம்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
பயனுள்ள தகவல்