நெற்பயிரில் விதை மூலம் பரவும் நோய் கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து விவசாயிகளுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பெரிய சாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
- கடந்த ஒரு வார மாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் நாற்றுவிடும் நடவுப்பணி, நேரடி நெல் விதை ப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். செப்டம்பர் மாதத்தில் சிஆர்1009 போன்ற நீண்டகால ரக நெல் விதைகளை நாற்றுவிட்டவர்கள் தற்போது நடவு செய்வதற்கு நிலம் தயார் செய்வதும் நடவு செய்வதுமாக இருக்கின்றனர்.
- நாற்றுகளை நடவு செய்வதற்கு முன்பாக உயிர் உரக்கரைசலில் 15 நிமிடம் வைத்திருந்து நடவு செய்ய வேண்டும்.
- நாற்றங்காலிலோ அல்லது நடவு வயலிலோ சிறு பாத்தி அமைத்து நீர் நிறுத்தி நெற்பயிர்க்கென பிரத்யேகமாக உற்பத்தி செய்யப்பட்ட அசோஸ்பயிரில்லம் 200 கிராம் (1 பாக்கெட்) அத்துடன் பாஸ்போபாக்டீரியா 200 கிராமை சேர்த்து கலக்கி கலவையாக தயார் செய்ய வேண்டும். சூடோமோனாஸ் புளுரோசென்ஸ் என்ற எதிர் உயிர் பாக்டீரியத்தையும் 1 கிலோ என்ற அளவில் சேர்த்து கொள்ளலாம். இதன்மூலம் நோய்களை கட்டுப்படுத்தலாம்.
- நாற்றங்காலில் இருந்து பறித்த நாற்றுகளை அதன் வேர்ப்பகுதி முழுவதுமாக 15 நிமிடம் உயிர் உரக்கரைசலில் மூழ்கி இருக்குமாறு செய்து வயலில் நடவு செய்ய வேண்டும்.இவ்வாறு செய்வதால் விரைவில் வேர் பிடித்து மண்ணில் உள்ள சத்துக்களை எளிதில் உறிஞ்சி பயிர் துரிதமாக வளர்ச்சி பெறும்.
- மேலும் வயல் வரப்புகளில் பயறு வகை பயிர்களாகிய உளுந்து, பச்சை பயறு அல்லது துவரை விதைகளை போது மான இடைவெளி விட்டு விதைப்பு செய்தால் கூடுதல் வருமானம் பெறலாம்.
- தற்போது நாற்றுவிடும் விவசாயிகள் ஏ.டி.டி39, ஏ.டி.டி46, பி.பி.டி5204, ஜெ.ஜி.எல்1798 போன்ற நெல் ரகங்களை சாகுபடி செய்யலாம். சான்று பெற்ற நெல் விதைகளை மட்டுமே வாங்கி நாற்றுவிட வேண் டும்.
- பயிரின் வளர்ச்சி காலங்களில் வரக்கூடிய நோய்கள் பெரும்பாலும் விதை மூலம் பரவக்கூடிய நோய்களாகும். இந்த நோய்களை கட்டுப்படுத்துவதற்கு அதிக செலவாகும். அதோடு மட்டுமல்லாது நோயை கட்டுப்படுத்த பயன்படுத்தக்கூடிய ரசாயன மருந்துகளின் நச்சுப்பயிர் மூலமாகவும் காற்று மற்றும் தண்ணீர் மூலமாகவும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதோடு மனித இனம், கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். இதை தவிர்ப்பதற்கு உயிரியல் காரணிகளை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
- விதை நேர்த்தி செய்ய 1 கிலோ விதைக்கு 1 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் எடுத்து 10 கிராம் சூடோமோனாஸ் புளோரோசன்ஸ் என்ற எதிர் உயிர் பாக்டீரியத்தை கலந்து 10 மணி நேரம் ஊற வைத்திருந்து வடிகட்ட வேண்டும். ஊற வைத்த விதையை தண்ணீரில் நனைந்த கோணிப்பையில் கட்டி 24 மணி நேரம் இருட்டில் வைத்து முளை கட்டி பின்னர் விதைக்கலாம் அல்லது நிழலில் உலர்த்திய பின்னர் விதைக்கலாம்.
- இத்துடன் 200 கிராம் நெல்லுக்குரிய அசோஸ் பயிரில்லம், 200 கிராம் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களையும் போதுமான அளவு தண்ணீரில் கலந்து ஒரு இரவு முழுவதும் ஊற வைத்திருந்து விதைக்கலாம். திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தில் 1 ஏக்கர் நடவு செய்வதற்கு ஒரு சென்ட் நிலத்தில் 2 கிலோ விதையளவு பயன்படுத்தி நாற்றுவிட்டால் போதுமானது.
நன்றி: தினகரன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்