நெற்பழம் நோய் தடுப்பு

கும்பகோணம் அருகே சாக்கோட்டை உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் கோவிந்தன் நெற்பழம் நோய் தடுப்பு குறித்து யோசனை தெரிவித்தார்.

  • நெற்பழம் நோய் கோ 43 ரக நெல்லில் அதிகமாக தாக்கும்.
  • இந்நோய் கதிர் வெளிவந்த நிலையில் நெல்மணிகளில் மேல் பால்பிடிக்கும் தருணத்தில் ஒருவித பழம் போன்ற பூசணம் காணப்படும்.
  • இதனால், மகசூல் பெருமளவில் பாதிக்கப்படும்.
  • ஒரு கிலோ விதைக்கு சூடோமோனஸ் பத்து கிராம் அல்லது கார்பன்டாசிம் இரண்டு கிராம் மற்றும் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து ஈர விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
  • நோய் அறிகுறி தென்படும் முன் டில்ட் 0.1 சதம் அல்லது காப்பர் ஹைட்ராக்சைடு 500 கிராம் ஒரு ஏக்கர் என்ற அளவில் பூக்கும் தருணத்திலும், பால் பிடிக்கும் தருணத்திலும் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
  • தேவையில்லாமல் தழைச்சத்து உரங்களை இடக்கூடாது.
  • மேற்கண்ட மருந்து கிடைக்காத பட்சத்தில் சூடோமோனோஸ் எதிர் பூஞ்சால மருந்தினை நோய் அறிகுறி தென்படும் முன் ஏக்கருக்கு 400 கிராம் என்ற அளவில், பூக்கும் தருணத்திலும், பால்பிடிக்கும் தருணத்திலும் 200 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *