நெல்லில் தண்டு துளைப்பான் நோய் கட்டுப்படுத்தும் முறைகள்

நெல் பயிரை தாக்கும் தண்டு துளைப்பானை கட்டுப்படுத்த எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையம் ஆலோசனை வழங்கியுள்ளது.

திண்டிவனம் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலைய தலைவர் டாக்டர் ராமமூர்த்தி, உதவி பேராசிரியர்கள் அன்புமணி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

  • நெல்லில் தண்டு துளைப் பான் நாற்று மற்றும் தூர்களின் குருத்துக்களை துளைத்து, நுனிக்குருத்து காய்ந்ததுபோல் தோற்றமளிக்கும்.
  • கதிர் உருவாகும் தருவாயில் நெற்பயிரை தாக்கினால் வெண்கதிர் அறிகுறிகள் நெல் வயலில் காணப்படும்.
  • குருத்தின் அடிப்பகுதியானது தண்டு துளைப்பான் புழுவால் பாதிக்கப்பட்டு சிறுதுளைகள் காணப்படும். அதன் எச்சங்களை தாக்கப்பட்ட குருத்தின் உட்பகுதியில் காணலாம்.
  • இந்த பூச்சியானது குருத்து வாங்கும் பருவத்தில் தாக்கினால் மகசூல் இழப்பு அதிகமாக இருக்கும்.
  • பெண் பூச்சியானது இலையின் நுனிக்கு சற்று கீழே குவியலாக முட்டையிடும், இந்த முட்டைக் குவி யல் ரோமங்களினால் மூடப் பட்டிருக்கும்.
  • முட்டையில் இருந்து வரும் புழுவானது மஞ்சள் நிறமாகவும், தலை பழுப்பு நிறமாகவும் காணப்படும். இப்புழுவானது குருத்தை தாக்கி சேதத்தை விளைவிக்கும்.

நோய் தடுப்பு :

  • நாற்றுகளை நெருக்கமாக நடுதலையும், தொடர்ச்சியாக வயலில் நீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும்.
  • விளக்குப்பொறிகளை அமைத்து அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
  • அறுவடை செய்த உடனே வயலை நன்கு உழுதிட வேண்டும்.
  • ஏக்கருக்கு 5 சி.சி. டிரைக்கோகிரம்மா ஜப் பானிக்கல் என்ற முட்டை ஒட்டுண்ணியை எடுத்து தண்டு துளைப்பானின் முட்டைப்பருவத்தை கட்டுப்படுத்தலாம்.
  • பேசில்லஸ் துரின்சிபென்சிஸ் என்ற கிருமிநாசியை இரண் டரை ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற அள வில் அல்லது வேப்பங்கொட்டை சாறு 5 சதவீதம் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
  • சேதார நிலை 25 சதவீதம் இருந்தால் குளோரான்டிரியல்புரோல் ஏக்கருக்கு 150 மி.லி., குளோர்பைரிபாஸ் ஏக்கருக்கு 1250 மி.லி., டெல்டாமெத்ரின் ஏக்கருக்கு 625 மி.லி., புளூபென் டபைடு 125 கிராம் மற்றும் லேம்டாசைலோத்ரின் 500 மி.லி., ஆகிய பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *