நெல்லுக்கு காப்பீடு செய்ய நவ.30 கடைசி நாள்

கடலூர் வேளாண்மை உதவி இயக்குநர் ஜி.ஆர்.முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்படி நெல் பயிருக்கு காப்பீடு செய்ய நவ.30ஆம் தேதி கடைசி நாளாகும். இத்திட்டத்தில் அனைத்து நெல் பயிரிடும் விவசாயிகளும் சேர்த்து பயனடையவும், உரிய காலத்தில் திட்டத்தினை செயல்படுத்தி முடிக்கும் நோக்கிலும் வேளாண்மைத்துறை இணை இயக்குநரால் விவசாயிகளுக்கு புதிய வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி நெல் பயிரிடும் விவசாயிகள் வங்கியின் கடன் பெறும்போது, பயிர்க் காப்பீடு செய்ய ஏதுவாக அவர்களின் கடன் தொகையிலிருந்து பிரீமியம் தொகை பிடித்தம் செய்து உரிய நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் கடன் பெறாத நெல் பயிரிடும் விவசாயிகளும் இத்திட்டத்தில் பயிர் காப்பீடு செய்யலாம்  என அதில் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமணி  

[embedit snippet=”whatsapp”]


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *