நெல் அறுவடைக்குப் பிந்தைய செய்நேர்த்தி தொழில்நுட்பங்கள்

நெல் அறுவடை வரையில் மட்டுமல்லாது, அறுவடைக்குப் பின்னரும் தொழில்நுட்ப முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் உற்பத்தியைப் பாதுகாத்து, நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம் என வேளாண்மைத் துறை அறிவித்துள்ளது.

  •  நெல்லுக்கு கூடுதல் விலை கிடைப்பது அதில் உள்ள முழு அரிசியின் அடிப்படையில்தான் உள்ளது.
  • நெல் மணிகள் அளவையில் 62 சதவீதம் முழு அரிசி கிடைத்திட, அறுவடைக்குப் பின்னர் செய் நேர்த்தி தொழில்நுட்ப முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமானது.
  • நெல் ரகங்களுக்கு ஏற்ற வகையில் பயிரின் அறுவடையை உரிய காலத்தில் மேற்கொள்ள வேண்டும்.
  • நெல் கதிரின் மணிகள் 80 சதவீதம் மஞ்சள் நிறமாக மாறி இருந்தால் அறுவடையை மேற்கொள்ளலாம். இதன் மூலம் மணிகள் உதிர்வதைத் தவிர்க்கலாம்.
  • அறுவடையின்போது 19 முதல் 23 சதவீதம் ஈரப்பதம் இருக்க வேண்டும்.
  • முதிர்ந்த நெல் மணிகளின் அரிசி கடுமையானதாகவும், உறுதியாகவும் இருக்கும். அறுவடை செய்த நெல்லை நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும்.
  • அதிக சூரிய வெப்பத்தில் நெல்லை காய வைக்கக் கூடாது.
  • காயவைத்த நெல்லின் ஈரப்பதம் 12 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும்.
  • அதிக ஈரப்பதமுள்ள நெல் மணிகளைச் சேமித்து வைத்தால் பூஞ்சாண வித்துகள் பரவி நெல்லின் தரம் பாதிக்கப்படும்.
  • நல்லை சுத்தமான கோணிப்பைகளில் நிரப்பி, தரையின் மீது மரச்சட்டங்கள் அல்லது காய்ந்த வைக்கோல் பரப்பி அதன் மேல் மூட்டைகளை அடுக்கி வைக்க வேண்டும்.
  • மூட்டைகளை சுவரிலிருந்து ஓர் அடி இடைவெளி விட்டு அடுக்கி வைத்தால் ஈரப்பதம் வராது.
  • சேமித்து வைத்துள்ள நெல்லில் அத்துப்பூச்சி தாக்காமலிருக்க மாலத்தியான் மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 10 மில்லி மருந்து அளவில் கலந்து தரைப்பகுதி, மூட்டைகள் மீது தெளிக்க வேண்டும்.
  • விற்பனைக்கு நெல்லைக் கொண்டு வரும்போது ரகங்கள் வாரியாகக் கொண்டுவர வேண்டும்.
  • பூச்சிகள், பூஞ்சாணங்கள் தாக்கப்பட்ட நெல் மற்றும் ஈரப்பதத்தால் கெட்டுப்போன நெல்லை தனியாகப் பிரித்து விட வேண்டும்.
  • ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும், கிராமங்களிலும் வேளாண் அலுவலரால் நெல் மணிகள் 4 தரங்களாகப் பிரிக்கப்படும். இங்கு ஈரப்பதம் மற்றும் தரங்களை இலவசமாக அறிந்து கொள்ளலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *