நெல் சாகுபடியில் ஒற்றை நாற்று நடவு செயல் முறைகள்

நெல் சாகுபடியில் புதிய ஒற்றை நாற்று நடவு மூலம் செம்மை நெல் சாகுபடி செய்து குறைந்த செலவில் அதிக விளைச்சல் ஏற்படுத்தி கூடுதல் லாபம் பெறமுடியும். இதன் செயல் முறைகள் பற்றி ஈரோடு வேளாண்மை இணை இயக்குனர் கோபால் தெரிவித்து உள்ளாவது:
  • செம்மை நெல் சாகுபடி செய்ய ஒரு ஏக்கர் நடவு செய்ய 3 கிலோ விதையை 30 கிராம் சூடோமோனாஸ் கொண்டு விதை நேர்த்தி செய்து ஒருநாள் முழுவதும் ஊறவைக்க வேண்டும்.
  • முளைகட்டிய விதையை நாற்றாங்காலில் இட வேண்டும்.
  • மேட்டுப்பாத்தி அமைத்து நாற்றங்கால் விடுவதால் நாற்றுக்கள் வளமான மற்றும் தடிமனான நாற்றுக்கள் கிடைக்கும்.
  • 13 அல்லது 14 நாட்கள் சென்ற பிறகு நாற்று நன்றாக வளர்ந்து நடவுக்கு தயாராகிவிடும்.
  • நிலத்தினை நன்றாக சமன்செய்து, மார்க்கர் கருவி மூலம் ஒரு குத்துக்கு ஒரு நாற்று வீதம் நடவு செய்யவேண்டும்.
  • ஒரு நாற்றுக்கு மற்றொரு நாற்றுக்கும் வரிசைக்கு வரிசை 25 செ.மீ-25 செ.மீ என்ற இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
  • நடவு செய்த பத்தாவது நாள் கோனாவீடர் மூலம் களை எடுக்க வேண்டும். 10 நாட்கள் இடைவெளியில் 4 முறைகளை எடுக்க வேண்டும்.
  • கோனாவீடர் கருவி மூலம் களை எடுக்கும்போது களைச்செடிகள் சேற்றுக்குள் அமுத்தப்பட்டு மட்கி, பயிர்களுக்கு உரமாகி விடுகின்றன. இதனால் மண்வளமும் பெருகும். மேலும் பயிர்கள் மொத்த வயதில் 10 நாட்களுக்கு முன்பாகவே பயிர்கள் அறுவடைக்குத்தயாராகி விடும்.
  • நெல் மணிகள் நன்கு திரட்சியாகவும், அதிக எடை கொண்டதாகவும் இருக்கும். மகசூலும் அதிகரிக்கும்.

நன்றி: மாலை மலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *