உலகத்தில் எந்த சமுதாயமும் இப்படி எதிர் கொண்டிருக்கும் அழிவை அலட்சிய படுதியடில்லை. இந்தியாவில் மட்டும் தான் இப்படி நடக்கும்.
ஒரு பக்கம் மக்கள் தொகை ஏறி கொண்டே போகிறது. இன்னும் முப்பது வருடங்களில், இந்திய சீனாவை மக்கள் தொகையில் பின் தள்ளி விடும். ஒரு பக்கம், இத்தனை மக்களுக்கும் உணவு எப்படி வரும் என்ற சிந்தனை மதிய அரசுக்கோ, மாநில அரசுக்கோ சுத்தமாக இல்லை. மும்பையில் மாடல் நடிகை தற்கொலை செய்து கொண்டால் பத்து நாட்கள் பொலம்பும் பத்திரிகைகள், தூக்கு போட்டு கொள்ளும் விவசயீகளை கண்டு கொள்வதே இல்லை.
இதோ, தினமணியில் வந்த கலங்க வைக்கும் செய்தி:”இடு பொருள்களின் விலை, கூலி உயர்வு, ஆள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் உற்பத்திச் செலவு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, நன்செய் நிலங்கள் தொழில்சாலைகளுக்கும், வீட்டுமனைகளுக்கும் தொடர்ந்து பலியாகிக் கொண்டிருக்கின்றன.தமிழகத்தில் 1950 ஆம் ஆண்டுகளில் நெல் பயிரிடப்பட்ட பரப்பு 76 லட்சம் ஏக்கர்களாக இருந்ததாகவும், அது தற்போது 54 லட்சம் ஏக்கர்களாகக் குறைந்துவிட்டது.”
விவசாயம் என்பது மானத்தோடும், லாபதொடும் செயப்பட ஒரு தொழில், எல்லோருக்கும் சோறு போடும் ஒரு உன்னதமான தொழில் என்ற நிலை வந்தால் தான் நம் நாட்டுக்கு எதிர்காலம். இல்ல விட்டால், இன்னும் இருபது ஆண்டுகளில், இங்கே, மக்கள் உணவு இல்லாமல் மடியும் நிலை உண்டாக்கலாம். அப்போது, இந்திய வல்லமை பொருந்திய நாடக இருந்து ஒரு பயனும் இல்லை!
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
என் பெயர் நாகராஜ கிருஷ்ணன், நான் ஒரு முதுகலை பட்டதாரி (M.Com ), தற்போது துபாய் இல் Accounts officer பணிபுரிந்து வருகிறேன், எனது வயது 25 , எனக்கு விவசாயத்தில் அதிக ஈடுபாடு உள்ளது, அனால் அனுபவம் இல்லை.எவ்வகை விவசாயம் நா ஈடு பட நல்லது என்று சற்று கூறவும், சொந்த ஊர் செங்கோட்டை.