- பத்தடிக்கு பத்தடி இடைவெளியில் இரண்டு முதல் இரண்டரை அடி விட்டமும், ஒன்பது அங்குலம் ஆழமுள்ள குழிகள் போடவேண்டும்.
- மக்கிய தொழு உரம் குழிக்கு ஒரு கூடை வீதம் கொட்டி மண்ணோடு நன்றாக கலக்கும்படி கொத்திவிட வேண்டும்.
- ஒரு ஏக்கரில் நட 3,200 முதல் 3500 விதைகள் தேவைப்படும்.
- விதையை ஆழமாக ஊன்றக்கூடாது. ஆழம் முக்கால் அங்குலத்திற்கு அதிகமாக போகக்கூடாது. ஒரு குழியில் நான்கு அல்லது ஐந்து செடிகள் வளரும்படி பணிகளை செய்துகொள்ள வேண்டும்.
- உயிர் தண்ணீர் விட வேண்டும். உயிர் தண்ணீர் விட்டு 15 நாட்கள் தொடர்ந்து தண்ணீர் விடவேண்டும்.
- விதை நட்ட 25ம் நாளிலிருந்து 30 நாட்களுக்குள் முதல் உரம் வைக்க வேண்டும். கு
- ழியிலுள்ள களைச்செடிகளை நன்றாக கொத்தி எடுத்து உரம் வைத்து பாசனம் செய்ய வேண்டும்.
- ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் உரம் 30 கிலோ 17:17:17 காம்ப்ளக்ஸ், 10 கிலோ யூரியா இவற்றை நன்கு கலந்து பின் 100 கிராம் அளவு கலவையை ஒரு குழிக்கு வைக்க வேண்டும்.
- விதை நட்ட 45 அல்லது 50வது நாள் குழி ஒன்றுக்கு 200 கிராம் 17:17:17 காம்ப்ளக்ஸ் உரம் மட்டும் வைக்க வேண்டும்.
- விதை நட்ட 35ம் நாள் செடி நன்றாக படர்ந்து கொடி ஓடும். இந்தக்கொடிகள் பூமியின் மீது ஓடும்போது கணுக்களிலிருந்து வெளிவரும் வேர்கள் பூமியில் இறங்கி நிலத்தை இறுகப்பிடித்துக்கொள்ளும்.
- கொடிகள் வளமாக நிலத்தை தழுவி வளரும்போதுதான் செடி சீராக பூ, பிஞ்சுகள் விடும்.
- நெல் வயலை உழாத சூழ்நிலையில் தரை கெட்டியாக இருக்கும். இதனால் கணுக்களிலிருந்து வேர் வெளிவந்தால் அவைகளால் நிலத்தினுள் இறங்க முடியாது.
- இதுசமயம் நிலத்தினை கொத்தி மிருதுவாக்கி கொடியின் கணுவை அதில் வைத்து மேலே மண் தள்ளி மூடி கைகளால் லேசாக அழுத்திவிட வேண்டும். இப்பணி பதியன் போடுதல் என்று அழைக்கப் படுகின்றது.
- செடி நட்ட 40 நாட்கள் கழித்து நஞ்சை வயல் முழுவதும் நன்கு நனையும்படி ஓர் உருட்டுத்தண்ணீர் பாசனம் செய்யலாம். இப்பணி செடியிலிருந்து பூ, பிஞ்சுகள் கொட்டிவிடுவதை தவிர்த்துவிடுகின்றது.
- வண்டுகள் விழக்கூடிய வாய்ப்பு உண்டு. இதைத்தடுக்க மெட்டாசிஸ்டாக்ஸ் அடிக்கலாம். அசரை விழுந்தால் ரோகர் 200 மில்லிஅடிக்கலாம்.
- பி.எச்.சி. மருந்து கண்டிப்பாக அடிக்கக் கூடாது. இதைத் தூவினால் செடி பட்டுப்போய்விடும்.
-எஸ்.எஸ்.நாகராஜன்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்