நெல் பயிரில் புகையான் பூச்சி கட்டுப்பாடு

நெல் பயிரில் புகையான் பூச்சி தாக்குதலை ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையில் கட்டுப்படுத்தலாம்’ என, வேளாண் உதவி இயக்குனர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

 • பள்ள்ளிபாளையம் வட்டாரத்தில் நெல் பயிர் தற்போது பூக்கும் நிலை முதல் பால் பிடிப்பு நிலை வரை உள்ளது.
 • தற்போது நீர் தேங்கியுள்ள வடிகால் வசதி குறைவான வயல்களில் புகையான் பூச்சியின் தாக்குதல் தென்படுகிறது.
 • இப்பூச்சிகள் சாம்பல் நிறமாக தத்துப் பூச்சிகளாக இருக்கும்.
 • இவை நெல் பயிரிடுடன் தூர் பகுதிகளில் கூட்டம் கூட்டமாக இருந்து சாற்றினை உறிஞ்சி சேதம் விளைவிக்கும்.
 • சத்து பயிரின் மேலே போகாததால் பயிர் மஞ்சளாக மாறி திட்டு திட்டாக கருகி நெருப்பு வைத்தது போன்றும், உச்சகட்ட சேதம் வட்டமாக தெரியும்.
 • பொதுவாக நெருக்கமாக நடவு செய்து, சூரிய வெளிச்சம் தூரில் படாது, காற்றோட்டம் இல்லாத சூழ்நிலையில் தூர்களில் இப்பூச்சி தாக்கும்.
 • தழைச்சத்து உரங்கள் யூரியா போன்றவை அதிகமாக இட்ட வயல்களை புகையான் பூச்சிகள் அதிகம் தாக்குகின்றன.
 • காற்றின் ஈரப்பதம் அதிகம் இருந்தாலும் புகையான் தாக்குதல் அதிகரிக்கும்.
 • ராஜராஜன் 1000 நெல் சாகுபடி வயல்களில் புகையான் தாக்குதல் இருக்காது.
 • புகையான் பூச்சிகள் இருப்பதை தூர்களின் அடியில் கண்காணித்து அழிக்க வேண்டும்.
 • புகையான் பூச்சியைப் பார்த்தவுடன் வயலில் தண்ணீரை உடனே வடித்து விடவேண்டும்.
 • ஆறு அடிக்கு ஒரு பட்டம் விட்டு வயலில் பயிரைப் பிரித்து வைக்க வேண்டும்.
 • தழைச்சத்து உரங்களை தவிர்க்க வேண்டும்.
 • தூர்களின் அடிப்பகுதியில் படும்படி மருந்து தெளிக்க வேண்டும்.
 • புகையானின் மறு உற்பத்தியை உண்டாக்கும் குயின்பாஸ், செயற்கை பைரித்ராய்டு ஆகிய மருந்துகளை தெளிக்கக் கூடாது.
 • ஒரு ஏக்கருக்கு அசிபேட் 75 எஸ்.பி., என்ற மருந்தை 250 கிராம் என்ற அளவில் தெளித்து பூச்சியை கட்டுப்படுத்தலாம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *