நேரடி நெல் விதைக்கும் கருவி, சிறுதானிய உமி நீக்கும் இயந்திரங்கள்!

நேரடி நெல் விதைக்கும் கருவி, சிறுதானிய உமி நீக்கும் இயந்திரம் குறித்து கூறும், கோவை, மத்திய வேளாண் பொறியியல் நிறுவனத்தின், மண்டல மைய, முதன்மை விஞ்ஞானி, முனைவர், த.செந்தில்குமார் கூறுகிறார்:

  • மத்திய வேளாண் பொறியியல் நிறுவனத்தின் மண்டல மையம், கோவையில், 1983ல் துவங்கப்பட்டது.ஆரம்பத்தில், நெல் சாகுபடியில் பயன்படும் சிறிய கருவிகளின் உற்பத்தி மேம்பாட்டுக்கு, வழிகாட்டும் தொழில் விரிவாக்க மையமாகத் துவங்கப்பட்டது.
  • தென் மாநிலங்களில் உள்ள சிறு மற்றும் குறுந்தொழில் உற்பத்தியாளர்கள், தொழில் முனைவோர், பண்ணை இயந்திரங்கள் மற்றும் அறுவடைக்குப் பின் பயன்படுத்தப்படும் கருவிகளை உற்பத்தி செய்வதன் வழிகாட்டுதலை, இம்மையத்தில் பெற்று வருகின்றனர்.
  • இந்த மண்டல மையத்தில், 30க்கும் மேற்பட்ட இயந்திரங்கள், விவசாயிகள் பயன்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.
  • நெல் நாற்று நடுவதை தவிர்த்து, நேரடி யாக நெல் சாகுபடி செய்ய, நன்செய் நிலங்களில் இந்த நேரடி நெல் விதைக்கும் கருவியைப்பயன்படுத்தலாம்.
  • உருளைகளில் முளை கட்டிய நெல் விதைகளை நிரப்பி, அதை ஒரு நபர், வயலில் இழுத்துச் செல்வதன் மூலம், விதைகள் வரிசையாக விதைக்கப்படுகின்றன.
  • இதனால், நாற்று விட்டு, நடவு செய்யும் செலவும் குறைகிறது; விளைச்சலும் குறைவில்லாமல் கிடைக்கிறது.
  • தகுந்த இடைவெளியில் விதைப்பதால், களை எடுப்பதிலும் சிரமம் ஏற்படுவதில்லை.
  • இந்தக் கருவியின் தொழில்நுட்பத்தை, எங்களிடம் இருந்து பெற்று, தனியார் நிறுவனங்கள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. இதன் விலை, 4,800 ரூபாய்.
  • மேம்படுத்தப்பட்ட சிறுதானிய உமி நீக்கும் கருவி வாயிலாக, மணிக்கு, 100 கிலோ உமி நீக்குவதோடு, அரிசியையும், உமியையும் தனித்தனியே பிரித்துக் கொடுக்கிறது.
  • இந்த கருவி, 4 அடி உயரம் இருப்பதால், பெண்கள் கூட சிரமமின்றி இயக்கலாம். ஒரு முனை மின் மோட்டார் மூலம் இயங்குவதால், வீட்டு மின் இணைப்பில் கூடப் பயன்படுத்தலாம்.இந்தக் கருவியின் விலை, 48 ஆயிரம் ரூபாய்.
  • எங்களின் மையத்தில் கண்டுபிடித்துள்ள, 35 வகையான கருவிகளைப் பார்வையிடவும், பயன்படுத்திக் கொள்ளவும் விவசாயிகளை அழைக்கிறோம்.

மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம், மண்டல மையம், கரும்பு உற்பத்தி நிறுவனம் அஞ்சல், கோவை – 641 007 என்ற முகவரியிலும், 9842955606 என்ற மொபைல் எண் மற்றும் 04222472624 , 04222472623 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

3 thoughts on “நேரடி நெல் விதைக்கும் கருவி, சிறுதானிய உமி நீக்கும் இயந்திரங்கள்!

  1. AVS. AYUBKHAN says:

    ஐயா மானாவாரியில் விவசாயம் செய்ய எனக்கு சம்பா விதை கோதுமை தேவை எங்கு கிடைக்கும் தகவள் தரவும்

  2. கனகராசு.தா says:

    கோவை வேளாண் பல்கலையில் நேரடி நெல் விதைப்பு கருவி பெற என்ன செய்ய வேண்டும்.
    விவரம் தருக.

  3. Gurumoorthy says:

    நல்ல பயனுள்ள விஷயங்களை தருகிறது. நன்றி. எனக்கு கோனோவீடர் புதிய கருவி தேவை .தஞ்சை பகுதியில் எங்கே கிடைக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *