நேரடி நெல் விதைப்புக் கருவி மூலம் விதைத்தால் ஆரம்பக் கட்டச் செலவில் ரூ. 5,000 வரை சேமிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன்.
தஞ்சாவூர் மாவட்டம், ஈச்சங்கோட்டை, சோழபுரம் ஊராட்சிகளில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற நேரடி நெல் விதைப்பு கருவி, பண்ணைக் கழிவுகளைத் தூளாக்கும் கருவி, சூரிய ஒளி சக்தி மூலம் மின் மோட்டார் அமைக்கும் திட்டம் ஆகியவற்றின் செயல்முறை விளக்கங்களைப் பார்வையிட்ட பிறகு அவர் மேலும் தெரிவித்தது:
- நேரடியாக நெல் விதைப்பு செய்வதால் நாற்றுகள் தயார்செய்ய வேண்டிய அவசியமில்லை.
- தண்ணீர் அதிகம் தேவைப்படாது. சரியான இடைவெளியில் விதைகள் விதைக்கப்படுவதால், இயந்திரக் களை எடுப்பான்களைக் கொண்டு களை எடுக்கலாம்.
- நேரடி நெல் விதைப்புக் கருவி மூலம் நாள் ஒன்றுக்கு 8 முதல் 10 ஏக்கர் வரை விதைக்கலாம்.
- இதன்மூலம், ஆரம்பகட்டச் செலவில் ஏக்கருக்கு ரூ. 5,000 வரை சேமிக்கலாம்.
- பண்ணைக் கழிவுகளைத் தூளாக்கும் கருவியின் மூலம் விவசாய கழிவுகளைத் தூளாக்கலாம். இதன்மூலம், இவை மண்புழு இயற்கை உரமாக மாற்றப்படுகிறது.
- இதுகுறித்து விவரங்கள் தேவைப்பட்டால், ஈச்சங்கோட்டை விவசாயி ஆரோக்கியசாமியை 09842434568 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
- சூரிய சக்தி மூலம் இயங்கும் மின் மோட்டாரின் மதிப்பு ரூ. 3,99,822. இதில், விவசாயிகளின் பங்குத்தொகை ரூ. 95,342. அரசு மானியம் 80%. இந்த மோட்டார் மூலம் குறைந்தபட்சம் 4 ஏக்கர் வரை விவசாயம் செய்யலாம் என்றார் ஆட்சியர்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்