நேரடி விதைப்பில் களைகளைக் கட்டுப்படுத்த யோசனை

திருத்துறைப்பூண்டி வேளாண்மைக் கோட்டத்தில் சம்பா நேரடிவிதைப்பு செய்யப்பட்ட நிலங்களில் பயிர் முளைத்த வயல்களில் களைகளைக் கட்டுப்படுத்தி பயிரைப் பாதுகாக்க வேளாண்மைத்துறையினர் விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.

இதுகுறித்து வேளாண்மை உதவிஇயக்குநர் த. நடேசன் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது:

  • திருத்துறைப்பூண்டி வேளாண்மைக் கோட்டத்தில் இதுவரை 14ஆயிரத்து 72ஹெக்டேர் பரப்பில் நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளது.
  • இந்த நேரடிவிதைப்பு செய்யப்பட்ட வயல்களில் பயிர்கள் நன்றாக முளைத்து உள்ளன.
  • கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழையினால் நிலத்தில் உள்ள ஈரத்தை பயன்படுத்தி,இனி முளைக்கும் களைகளைக் கட்டுப்படுத்திட ஏக்கருக்கு 400மி.லி பிரிட்டிலாக்குளோர் களைக்கொள்ளியை 20கிலோ மணலுடன் கலந்து நிலத்தில் நன்கு படும்படியாக தூவவேண்டும்.
  • அல்லது 200லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளித்து களைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
  • இந்த களைக்கொள்ளி அரசு வேளாண்மை விரிவாக்க மையங்களில் 50%மானிய விலையில் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
  • களைக்கொல்லி தெளித்த 3தினங்களுக்கு பின்னர், 1செ.மீ நீர்கட்டி ஏக்கருக்கு டி.ஏ.பி.50கிலோ,பொட்டாஷ் 25கிலோ,துத்தநாகசல்பேட் 10கிலோ,அல்லது நெல்நுண்ணூட்டம் 5கிலோ, மேலும் 6 பாக்கெட் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியம் உயிர்உரங்களை 25கிலோ தொழுஉரத்துடன் கலந்து இடவேண்டும்.
  • துத்தநாகசல்பேட், ஜிப்சம் நெல்நுண்மூட்ட உயிர்உரங்கள் தமிழக முதல்வரின் சம்பா சிறப்பு தொகுப்புத்திட்டத்தின் கீழ்75%மானியவிலையில் வழங்கப்படுகிறது.
  • தேவையான டி.ஏ.பி, பொட்டாஷ், யூரியா  உள்ளிட்ட் அனைத்து உரங்களும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும், தனியார் உரக்கடைகளிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
  • நேரடி விதைப்பு செய்துள்ள விவசாயிகள் உழவு மானியத்தைப் பெற உரிய விண்ணபங்களைப் பூர்த்தி செய்து சம்பந்தப்பட பகுதி உதவி வேளாண்மை அலுவலரிடம் அளித்து பயன்பெற வேண்டுமென உதவிவேளாண்மைஇயக்குநர் த.நடேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *